Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ஷ்ட தேவதை.. ஒரே ஒரு மேட்ச் ஜெயிச்சு செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. காரணமே மழை தான்

லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பெற்றிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்தது. இதற்கு காரணமே மழை எனும் அதிர்ஷ்டம் தான்.

அந்த பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்று இருந்தன. ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 352 ரன்கள் என்ற மெகா இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

AUS vs AFG Champions Trophy 2025 Afghanistan

அடுத்து தென்னாப்பிரிக்காவுடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியும் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி மொத்தம் நான்கு புள்ளிகள் பெற்றது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இரண்டு புள்ளிகளையும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகள் கைவிடப்பட்டதால் தலா ஒரு புள்ளிகளையும் பெற்றது ஆஸ்திரேலியா.

இந்த நான்கு புள்ளிகளின் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து இருக்கிறது. மேலும், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுவிட்டு அரையிறுதியை உறுதி செய்து இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. நிச்சயமாக இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ஷ்டம் அதிக அளவில் கை கொடுத்து இருக்கிறது.

ஏனெனில், இதற்கு முந்தைய சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆஸ்திரேலிய அணியால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. ஆனால், இந்த முறை மழை, ஆஸ்திரேலிய அணிக்கு உதவி செய்து இருக்கிறது. அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யவும் மழை ஒரு காரணமாக இருந்துள்ளது.

குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது அணியாக ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. குரூப் பி பிரிவில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. அதில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

அந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்தாலும் ஆப்கானிஸ்தான் அணியை விட அதிக நெட் ரன் ரேட் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உதாரணமாக இங்கிலாந்து அணி 207 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே தென்னாப்பிரிக்க அணியின் நெட் ரன் ரேட் ஆப்கானிஸ்தானை விட கீழே செல்லும். இது சாத்தியமில்லாதது என்பதால் தென்னாப்பிரிக்க அணியும் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Friday, February 28, 2025, 22:42 [IST]
Other articles published on Feb 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+