Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs AFG: 109/1 ஸ்கோர் ஆஸ்திரேலியா எடுத்தும், டக்வொர்த் லூயிஸ் விதி ஏன் அமல்படுத்தவில்லை.. விவரம்

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வாழ்வா? சாவா? என்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் இன்று எதிர்கொண்டது. லாகூரில் நேற்று முழுவதும் கனமழை பெய்து தான் இன்றைய ஆட்டத்திலும் மழை பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திட்டமிட்டபடி டாஸ் வீசப்பட்டது. இதனால் இன்று போட்டி முழுவதும் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். டாஸ் வீசும்போது ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தாலும், ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் நாங்கள் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்ய இருந்ததாக கூறினார்.

AFG vs AUS Champions Trophy 2025 steve smith

இதற்கு காரணம் மழை எப்போது வேண்டுமானாலும் குறிக்கிட்டால் டக்வொர்த் லூயிஸ் விதி அமிலுக்கு வரும் என்பதால் இந்த முடிவை நாங்கள் எடுக்க இருந்தோம் என்று அவர் கூறியிருந்தார். இதற்கு தகுந்தபடியாக ஆஸ்திரேலியாவுக்கு, ஆப்கானிஸ்தான் கடும் போட்டியை அளித்தது. 50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யபோது மழை எப்போது வேண்டுமானாலும் குறிக்கிடலாம் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடி காட்டினர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. 12.5 ஓவர் முடிவடைந்த நிலையில் மழை அதிகமாக பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அருகே வந்திருந்தது. ஒருவேளை டக்வொர்த் லூயிஸ் விதியை அமல்படுத்தியிருந்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருக்கும்.

ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி அதிக விக்கெட் எடுத்திருந்து மழை குறுக்கிட்ட ஓவரில் வெற்றிக்கு தேவையான இலக்கை ஆஸ்திரேலிய தொடாமல் இருந்திருந்தால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

பலரும் டக்வொர்த் லூயிஸ் விதி ஏன் அமல்படுத்தவில்லை என்று குழம்பி இருந்தனர். விதிப்படி 50 ஓவர் போட்டியில் சேஸிங் செய்யும் அணி 20 ஓவர்களை எதிர் கொண்டிருக்க வேண்டும். 20 ஓவரை நிறைவு செய்திருந்தால், மட்டுமே டக்வொர்த் லூயிஸ் விதியை அமல்படுத்த முடியும். ஆனால் ஆஸ்திரேலியா அணி 12.5 ஓவர் மட்டுமே பிடித்திருந்ததால், டக்வொர்த் லூயிஸ் விதி அமலாகவில்லை. இதனால் தான் இதை அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 28, 2025, 23:22 [IST]
Other articles published on Feb 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+