Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs AFG: கிரிக்கெட்டில் யாரும் செய்யாத டபுள் ஹாட்ரிக் சாதனை செய்தும் சோகத்தில் பாட் கம்மின்ஸ்

பிரிட்ஜ்டவுன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான பேட்ட பாட் கம்மின்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்தும் ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்ததால் அதை கொண்டாட முடியாத மனநிலைக்கு சென்றார். 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின் போது கடினமான பிட்ச்சில் ஆப்கானிஸ்தான் அணி 148 ரன்கள் சேர்த்தது. அப்போது 18 வது ஓவரை வீசிய பாட் கம்மின்ஸ், ரஷித் கான், கரீம் ஜன்னத் மற்றும் குலாபுதீன் நயிப் ஆகிய மூவரின் விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதற்கு முந்தைய போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராகவும் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தி இருந்தார்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

இதன் மூலம் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் ஆகிய இரண்டிலும் சேர்த்து அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் என்று அரிய சாதனையை படைத்தார் கம்மின்ஸ். இதற்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் வாசிம் அக்ரம் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 1999 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் வாசிம் அக்ரம் அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

டெஸ்ட் போட்டிகளை காட்டிலும் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக முறை ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கும் நிலையில் எந்த ஒரு வீரரும் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை செய்ததில்லை. அந்த அரிய சாதனையை செய்து இருக்கிறார் பாட் கம்மின்ஸ். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 149 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்த போது மோசமாக ஆடி 127 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 21 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா. இந்த தோல்வியால் தனது உலக சாதனையை கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார் பாட் கம்மின்ஸ்.

Story first published: Sunday, June 23, 2024, 12:48 [IST]
Other articles published on Jun 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+