Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 பந்தில் 4 விக்கெட்.. வார்னர் தவறால் மிஸ்ஸான மலிங்கா சாதனை.. கடுப்பான கம்மின்ஸ்.. என்ன நடந்தது?

கிங்ஸ்டவுன் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கில் செய்த தவறால் மலிங்காவின் சாதனையை சமன் செய்ய முடியாமல் முடிவுக்கு வந்தது.

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 149 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல், 19.2 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட்டாகியது. இதனால் ஆஸ்திரேலியா அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

t20 world cup indian national cricket team cricket Pat Cummins 20 2024

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ்-க்கு புதிய சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைத்தது. 18வது ஓவரை வீசிய கம்மின்ஸ், கடைசி பந்தில் ரஷித் கான் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன்பின் மீண்டும் கடைசி ஓவரை வீச கம்மின்ஸ் அழைக்கப்பட்டார். இந்த ஓவரின் முதல் பந்தில் கரீம் ஜனத் 13 ரன்களில் ஆட்டமிழக்க, 2வது பந்தில் குல்புதின் நைப் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதன் மூலம் பேட் கம்மின்ஸ் 2வது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். தொடர்ந்து 4வது பந்தில் ஹரோத்தே பவுண்டரி அடிக்கும் முயற்சியில் தூக்கி அடிக்க, அது நேராக டேவிட் வார்னர் நிற்கும் திசைக்கு பறந்தது. அவர் எளிதாக பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அந்த கேட்சை கோட்டைவிட்டார். இதனால் கம்மின்ஸ் களத்தில் டென்ஷனாகினார்.

ஏனென்றால் அந்த கேட்சை வார்னர் பிடித்திருந்தால் 4 பந்துகளில் 4 விக்கெட்டை வீழ்த்திய பெருமை பேட் கம்மின்ஸ்-க்கு கிடைத்திருக்கும். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 4 பந்தில் 4 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை மலிங்கா மட்டுமே படைத்துள்ளார். கம்மின்ஸ்-க்கு அந்த வாய்ப்பு கிடைத்த போதும், டேவிட் வார்னரால் தவறியுள்ளது.

இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக மலிங்கா, டிம் சவுதி, செர்பியா வீரர் மார்க், மால்டா வீரர் வசீம் ஆகியோர் தொடர்ந்து 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 23, 2024, 14:42 [IST]
Other articles published on Jun 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+