For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

AUS vs AFG : டாஸில் எடுத்த தவறான முடிவு.. ஃபீல்டிங் கொடூரம்.. தோல்வியால் புலம்பிய ஆஸி. கேப்டன்!

கிங்ஸ்டவுன் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு ஃபீல்டிங் முக்கிய காரணமாக அமைந்தது என்றும், ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் கூடுதலாக ரன்கள் சேர்த்துவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

2023 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த கிடைத்த வாய்ப்பை ஆஃப்கானிஸ்தான் அணி கோட்டைவிட்டது. அந்த தோல்விக்கு அடுத்த ஐசிசி தொடரிலேயே ஆஃப்கானிஸ்தான் அணி பதிலடி கொடுத்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 149 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் வலிமையான ஆஸ்திரேலியா அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது.

t20 world cup indian national cricket team cricket Rashid Khan

இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் அரையிறுதி வாய்ப்பும் கேள்விக் குறியாகியுள்ளது. ஏனென்றால் இந்திய அணியை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதோடு, ரன் ரேட் மீதும் கவனம் வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றி ஒன்றும், அப்செட் கிடையாது என்று முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பின் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பேசுகையில், ஆஃப்கானிஸ்தான் அணி 200 ரன்கள் கூடுதலாக சேர்த்து என்று நினைக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடினார்கள். எங்களை விடவும் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டார்கள். மைதானத்தில் முதல் பேட்டிங் செய்த அணிகளே அதிக வெற்றியை பெற்றுள்ளார்கள் என்பதே அறிந்தே பவுலிங்கை தேர்வு செய்தோம்.

ஆனால் இந்த டி20 உலகக்கோப்பையில் ஏராளமான அணிகள் பவுலிங்கை தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த பிட்ச் குறித்து அறிந்து கொள்ளும் முடிவாகவே அது அமைந்திருக்கிறது. நாங்கள் டாஸின் போது எடுத்த முடிவு காரணமாக தோற்கவில்லை. எங்களின் ஃபீல்டிங் மோசமாக அமைந்தது. அதற்கு நாங்களே காரணம் என்று தெரியும். நிச்சயம் அடுத்த போட்டியில் கம்பேக் கொடுப்போம்.

இந்த பிட்ச் எளிய விக்கெட் கிடையாது. இருந்தாலும் இரு அணிகளும் இதே பிட்சில் தான் விளையாடினோம். அதனால் தோல்விக்கு பின் குறை சொல்ல கூடாது. அடுத்தப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாட வேண்டும். அதனால் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பாராட்டுகள். இந்த தோல்வியில் இருந்து நாங்கள் விரைவாக மீள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, June 23, 2024, 13:07 [IST]
Other articles published on Jun 23, 2024
English summary
AUS vs AFG : We had a off day in the Fielding as a unit against Afghanistan Says Australia Captain Mitchell Marsh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+