Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாராச்சும் அவர நிறுத்துங்கடா.. 17 ஆண்டுகளுக்கு பின்.. கம்மின்ஸ் படைத்த சாதனை.. ஹாட்ரிக் சம்பவம்!

ஆன்டிகுவா : வங்கதேசம் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார். ஆன்டிகுவா மைதானத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையிலான சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஷான்டோ 41 ரன்களும், ஹிரிடாய் 40 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 17 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

t20 world cup indian national cricket team cricket Pat Cummins 20 2024

இதன்பின் 18வது ஓவரை வீச பேட் கம்மின்ஸ் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 5வது பந்தில் அனுபவ வீரரான மஹ்மதுல்லா இன்சைட் எட்ஜாகி 2 ரன்களில் போல்டாகினார். இதன்பின் கடைசி பந்தில் மெஹதி ஹசன் டக் அவுட்டாகி வெளியேறினார். 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், கம்மின்ஸ் ஓவர் முடிவுக்கு வந்தது. இதன்பின் மீண்டும் கடைசி ஓவரை வீச அழைக்கப்பட்டார்.

அந்த பந்தில் கம்மின்ஸிற்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. முதல் பந்தை எதிர்கொண்ட ஹிரிடாய் ஸ்கூப் ஷாட் அடிக்க, அந்த பந்து நேராக ஹேசல்வுட் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதன் மூலமாக கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வீரர் பிரட் லீக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

அந்த சாதனையை 17 ஆண்டுகளுக்கு பின் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சமன் செய்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் 4வது ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையும் பேட் கம்மின்ஸிற்கு கிடைத்துள்ளது. இவருக்கு முன் பிரட் லீ, ஆஷ்டன் அகர், நேதன் எல்லீஸ் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

அதேபோல் டி20 உலகக்கோப்பை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் 7வது வீரராகியுள்ளார் கம்மின்ஸ். இவருக்கு முன் பிரட் லீ, குர்திஸ் காம்பர், ஹசரங்கா, ரபாடா, கார்த்திக் மெய்யப்பன், ஜோஷ்வா லிட்டில் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலியா அணி வீரர் பேட் கம்மின்ஸ் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியுள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Story first published: Friday, June 21, 2024, 9:55 [IST]
Other articles published on Jun 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+