Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலிங்கில் கோட்டை விட்டு.. பேட்டிங்கில் போராடிய வங்கதேசம்.. அடிச்சு தூக்கிய வார்னர்!

நாட்டிங்ஹாம் : ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையே ஆன 26வது உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேசம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

1
43669

அபாரமாக பேட்டிங் செய்து ரன் குவித்த டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாவார்.

AUS vs BAN Cricket World cup 2019 : Australia vs Bangladesh match results and highlights

வங்கதேசம் பவுலிங்கில் அதிக ரன்களை வாரி வழங்கிவிட்டு, சேஸிங்கின் போது போராடினர். ஆனால், வெற்றி இலக்கு பெரிதாக இருந்ததை அடுத்து அந்த அணி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் - ஆரோன் பின்ச் சிறப்பான துவக்கம் அளித்தனர். ஆரோன் பின்ச் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கவாஜா, வார்னருடன் இணைந்து ரன் குவித்தார்.

கவாஜா 89, மேக்ஸ்வெல் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வார்னர் 166 ரன்கள் குவித்து உலகக்கோப்பை வாரலாற்றில் இரண்டு முறை 150+ ரன்கள் சேர்த்தவர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 381 ரன்கள் குவித்தது.

வங்கதேச பந்துவீச்சில் மெஹிதி ஹாசன் தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 7, 8 ரன்கள் வாரிக் கொடுத்தனர். வங்கதேச அணி 300+ ரன்கள் அடிக்கும் என்றாலும், இத்தனை பெரிய இலக்கை சேஸிங் செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

வங்கதேச அணியில் தமிம் இக்பால் 62, ஷகிப் ஹல் ஹசன் 41, முஷ்பிகுர் ரஹீம் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். மக்மதுல்லா 69 ரன்கள் குவித்தார். அதுவும் பயனில்லாமல் போனது.

50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டார்க், கோல்டர் நைல், ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். சாம்பா 1 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தப் போட்டியின் வெற்றியோடு ஆஸ்திரேலியா புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. வங்கதேசம் தொடர்ந்து ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

Story first published: Friday, June 21, 2019, 0:34 [IST]
Other articles published on Jun 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+