Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs ENG: ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைத்த அதிரடி மன்னன்.. இங்கிலாந்து அசால்ட் வெற்றி.. தொடர் சமன்

கார்டிஃப்: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டம் ஆடினார். பந்துவீச்சிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவரது "ஆல் ரவுண்ட்" ஆட்டத்தால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

england australia

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். ஆல் ரவுண்டர் மேத்யூ ஷார்ட் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அவர் 24 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட டிராவிஸ் ஹெட் 14 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அதிரடி காட்டினார். இளம் வீரர் ஜேக் ஃபிரேசர் 31 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். அவர் 4 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து இருந்தார். இதற்கு முந்தைய போட்டிகளில் துவக்க வீரராக அவர் சரியாக ஆடாத நிலையில் இந்த போட்டியில் அவர் அதிரடி ஆட்டம் ஆடி தனது ஃபார்மை நிரூபித்தார்.

நான்காம் வரிசையில் இறங்கிய ஜோஸ் இங்கிலிஸ் 26 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். அதன் பின் மார்கஸ் ஸ்டானிஸ் இரண்டு ரன்களும், டிம் டேவிட் ஒரு ரன்னும் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி நேரத்தில் கேமரான் க்ரீன் 8 பந்துகளில் 13 ரன்களும், ஆரோன் ஹார்டி 9 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து இருந்தது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணியில் பிர்டன் கார்ஸ் இரண்டு விக்கெட்டுகளும், சாம் கர்ரன் மற்றும் அதில் ரஷித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். லியாம் லிவிங்ஸ்டன் 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அடுத்து 194 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடத் துவங்கியது.

அந்த அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட் அதிரடியாக ஆடி வந்தார். மறுபுறம் வில் ஜேக்ஸ் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஜோர்டன் காக்ஸ் டக் அவுட் ஆனார். ஃபில் சால்ட் 23 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். நான்காம் வரிசையில் இறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 47 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். அவர் 6 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்திருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிய ஜாக்கப் பெத்தேல் 24 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். அவர் 4 ஃபோர் மற்றும் 3 சிக்ஸ் அடித்து இருந்தார்.

சரியாக 193 ரன்கள் எடுத்த நிலையில் லிவிங்ஸ்டன் 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே பிர்டன் கார்ஸ் அவுட் ஆனார். எனினும், 19-வது ஓவரின் முடிவில் 194 ரன்கள் இலக்கை எட்டியது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ ஷார்ட் அபாரமாக பந்து வீசி 3 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவர் சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 1 - 1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

Story first published: Saturday, September 14, 2024, 8:00 [IST]
Other articles published on Sep 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+