Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ashes: ஆஸ்திரேலியாவை வீழ்த்த கிடைத்த வாய்ப்பு போச்சே.. இங்கிலாந்து செய்த சொதப்பல்.. 5 கேட்ச் மிஸ்

பிரிஸ்பேன்: 2025 ஆஷஸ் பகல் - இரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இங்கிலாந்து அணி வீரர்கள் செய்த படுமோசமான ஃபீல்டிங் தவறுகளால் ஆஸ்திரேலியா அணி வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது. ஒருமுறை அல்ல, இரண்டு முறை அல்ல, மொத்தம் 5 கேட்ச்களை இங்கிலாந்து வீரர்கள் நழுவவிட்டதால், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

பிரிஸ்பேனில் நடைபெறும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் (138*) சதத்தின் உதவியுடன் 334 ரன்கள் குவித்தது. கடைசி விக்கெட்டுக்கு ரூட் மற்றும் ஆர்ச்சர் ஜோடி 70 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைக் களைப்படையச் செய்தது.

AUS vs ENG Ashes England s Five Dropped Catches Prove Costly as Australia Takes 44-Run Lead in Brisbane Ashes Test

சொதப்பலோ சொதப்பல்.. 5 கேட்ச் டிராப்!

அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முயற்சி செய்தாலும், ஃபீல்டர்கள் அவர்களுக்குத் துரோகம் இழைத்தனர். தொடக்கத்தில் டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறவிட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 0 ரன்னில் இருந்தபோதும், 25 ரன்னில் இருந்தபோதும் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். ஜோ ரூட் ஸ்லிப்பில் ஒரு கேட்சை விட்டார். மைக்கேல் நேசர் 6 ரன்னில் இருந்தபோது கார்ஸ் ஒரு எளிய கேட்சை நழுவவிட்டார். பென் டக்கெட்டும் கல்லி (Gully) திசையில் ஒரு கேட்சை விட்டார்.

இப்படி இங்கிலாந்து வீரர்கள் சகட்டுமேனிக்கு பல கேட்ச்களைக் கோட்டை விட்டதால், ஆஸ்திரேலியா எந்தவித சிரமமும் இன்றி ஸ்கோரை உயர்த்தியது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தாண்டி அதிக ரன் குவித்து களத்தில் உள்ளது.

வெதரால்ட் அதிரடி.. ஸ்மித் நிதானம்

ஆஸ்திரேலிய அணியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்றாலும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக ஆடினர். தொடக்க வீரர் ஜேக் வெதரால்ட் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தைப் பதிவு செய்தார். 78 பந்துகளில் 72 ரன்கள் விளாசி நல்ல அடித்தளம் அமைத்தார். மார்னஸ் லபுஷேன் தனது பாணியில் நிதானமாக ஆடி 65 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவ் ஸ்மித் (61) மற்றும் கேமரூன் கிரீன் (45) ஜோடி 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்தைச் சோதித்தது.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணியை மீட்கக் கடுமையாகப் போராடினார். பிரைடன் கார்ஸ் 113 ரன்களை வாரி வழங்கினாலும், முக்கிய நேரத்தில் ஸ்மித், கிரீன் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்குச் சற்று ஆறுதல் அளித்தார். வில் ஜாக்ஸ் பிடித்த ஒரு அற்புதமான ஒற்றைக் கை கேட்ச் மூலம் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதிர்ஷ்டத்தால் தப்பித்த அலெக்ஸ் கேரி மற்றும் மைக்கேல் நேசர் ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் சேர்த்துள்ளது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது 44 ரன்கள் முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலியா, 3-ம் நாளில் முன்னிலையை இன்னும் உயர்த்தினால், இங்கிலாந்து அணிக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

Story first published: Friday, December 5, 2025, 20:17 [IST]
Other articles published on Dec 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+