AUS vs ENG- மழை வைத்த ஆப்பு.. இங்கிலாந்துக்கு சோகம்.. தொடரை வென்ற ஆஸ்திரேலியா.. டக்கட் சதம் வீண்
பிரிஸ்டல் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் t20 தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இரு அணிகளும் வென்று சமணில் முடிவடைந்தது.
இதனையடுத்து ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகளில் வென்றது. இதனை அடுத்து தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று பிரிஸ்டன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன் பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 45 ரன்களும், வில் ஜேக்ஸ் டக்அவுட் ஆகியும் வெளியேறினர். எனினும் மற்றொரு தொடக்க வீரரான பெண் டக்கட் அபாரமாக விளையாடி 91 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று கேப்டன் ஹாரி புரூக் 52 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார்.
இதில் ஏழு இமாலய சிக்ஸர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இதன் பின் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 400 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்வரிசை வீரர்கள் சொதப்பியதால் 49.2 ஓவர்களில் வெறும் 350 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் அரோன் ஹார்டி,ஆடம் சாம்பா மற்றும் மேக்ஸ்வெல் தலா
2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை அடுத்து 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய மேத்தீவ் ஷார்ட் 58 ரன்களும், டிராவிஸ் ஹேட் 31 ரன்கள் எடுத்தனர். ஜோஸ் இங்கிலீஷ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்மித் 48 பந்துகளில் 36 ரன்களும்,ஜோஸ் இங்கிலீஷ் 20 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
20.4 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இந்த இடத்தில் போட்டி தொடங்க முடியாத நிலையில் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி 49 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணத்தில் கைப்பற்றி இருக்கிறது.
தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட்கள் விளையாட போகிறது. ஆஸ்திரேலிய அணி தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.


Click it and Unblock the Notifications