Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ashes: எவ்ளோ பெரிய ஜாம்பவான்.. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு மேட்ச் கூட ஜெயித்ததே இல்லை.. மோசமான சாதனை

சிட்னி: இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான ஜோ ரூட், ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த வீரர் என்ற தேவையற்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக்கின் மோசமான சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்தவர், தலைசிறந்த பேட்ஸ்மேன் என பல பெருமைகளை வைத்திருப்பவர் ஜோ ரூட். ஆனால், ஆஸ்திரேலியா என்று வந்துவிட்டாலே அவருக்கு ராசியே இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

AUS vs ENG Joe Root Equals Alastair Cook s Unwanted Record 15 Test Defeats in Australia

2012-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஜோ ரூட், இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் ஒரு வெற்றியை கூட ருசிக்கவில்லை என்பதுதான் சோகம். விளையாடிய 17 போட்டிகளில் 15-ல் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகள் மட்டுமே டிராவில் முடிந்துள்ளன.

இதற்கு முன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் தலா 15 டெஸ்ட் தோல்விகளைச் சந்தித்து முதலிடத்தில் இருந்தனர். தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் அடிலெய்ட் டெஸ்ட் தோல்வியின் மூலம், ஜோ ரூட்டும் 15 தோல்விகளுடன் அவர்களுடன் இணைந்துள்ளார்.

குக் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் 15 போட்டிகளில் தோற்றிருந்தாலும், ஆஸ்திரேலியாவில் சில வெற்றிகளையும் ருசித்துள்ளனர். ஆனால், ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை.

தொடரும் சோகம்:

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2025 ஆஷஸ் தொடரிலும் இங்கிலாந்து அணி திணறி வருகிறது. பெர்த், பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்ட் என வரிசையாக 3 போட்டிகளிலும் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியுள்ளது. அத்துடன் நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் 0 - 3 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது.

அதிக தோல்விகள் (ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டில்):

ஜோ ரூட்: 15 தோல்விகள் (ஆஸ்திரேலியாவில்)
அலஸ்டர் குக்: 15 தோல்விகள் (ஆஸ்திரேலியாவில்)
ஜேம்ஸ் ஆண்டர்சன்: 15 தோல்விகள் (ஆஸ்திரேலியாவில்)

உலக அளவில் அதிக டெஸ்ட் தோல்விகளைச் சந்தித்த வீரர்கள் பட்டியலிலும் ஜோ ரூட் முன்னேறி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சந்தர்பால் (77 தோல்வி), ஆண்டர்சன் (68 தோல்வி) ஆகியோருக்கு அடுத்தபடியாக பிரையன் லாரா, முஷ்பிகுர் ரஹிம் ஆகியோருடன் இணைந்து 63 தோல்விகளுடன் ஜோ ரூட் உள்ளார்.

ரன்களைக் குவிப்பதில் வல்லவரான ஜோ ரூட், வெற்றியைத் தேடித்தருவதில் மட்டும் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து சறுக்கி வருவது இங்கிலாந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Monday, December 22, 2025, 14:09 [IST]
Other articles published on Dec 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+