Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புத்திசாலித்தனமாக இங்கிலாந்து வீரரை ஏமாற்றிய ஆஸி பவுலர் ஹேசல்வுட்.. இவரையா RCB வேண்டாம் என சொன்னது!

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 180 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டி20 கிரிக்கெட் ஒரு காலத்தில் 180 ரன்கள் எடுத்தால் அதை சேஸ் செய்வது கடினம் என்ற சூழல் இருந்தது.

ஆனால் தற்போது 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் கூட அதனை பின்னால் பேட்டிங் செய்யும் அணி எளிதாக சேஸ் செய்து விடுகிறது. இந்த சூழலில் 180 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி எளிதாக எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தால் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தினர்.

eng vs aus england vs australia cricket

குறிப்பாக பாட் காமின்ஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற பவுலர்கள் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய அணி இதை சாதித்து காட்டி இருக்கிறது. கிரிக்கெட்டைப் பொருத்தவரை எப்போதுமே புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் மட்டுமே பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் கிடைக்கும். அசுர வேகம் மட்டும் இருந்தால் போதாது. விவேகமும் தேவை என்பதை நேற்று உணர்த்திக் காட்டுகிறார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ் ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் குறிப்பாக லியாம் லிவிங் ஸ்டோன் அபாரமாக விளையாடி வந்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 37 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். லியோன் லிவிங்ஸ்டோன், பேட்டிங் செய்து கொண்டிருந்த போதுதான் ஜோஸ் ஹேசல்வுட் தன்னுடைய புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார்.

அதாவது ஆட்டத்தின் 13.1 வது ஓவரில் லியாம் லிவிங்ஸ்டோன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஹேசல்வுட் கட்டர் வகையான பந்தை வீசப் போகிறேன் என்று பேட்ஸ்மேனுக்கு தெரியப்படுத்தும் விதமாக தன்னுடைய கை மணிக்கட்டை பின்னால் திருப்பி வைத்து பந்தை வீச வந்தார். இதனால் பவுலர் மெதுவான ஒரு பந்தை தான் வீசப் போகிறார் என்பதை புரிந்து கொண்டு லிவிங்ஸ்டோன், அதற்கு ஏற்றார் போல் பேட்டிங் செய்ய தயாரானார்.

ஆனால் பந்தை வீசும் பொழுது திடீரென்று ஹேசல்வுட் கை மணிக்கட்டை சரியாக மாற்றிக்கொண்டு வேகமாகப் பந்து வீசினார். இதனை கொஞ்சம் கூட எதிர்பாராத வியாம் லிவிங்ஸ்டோன் போல்ட் ஆனார். இது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. லிவிங் ஸ்டோன் அதிரடியாக விளையாடும் போது அவருடைய விக்கெட்டை வீழ்த்த தன்னுடைய புத்திசாலித்தனத்தை ஆஸ்திரேலியா பயன்படுத்தி இருக்கிறது.

இப்படிப்பட்ட வீரர்களை தான் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வேண்டாம் என நீக்கியது. ஹேசல்வுட் இதுவரை ஐபிஎல் தொடரில் 27 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சிஎஸ்கே ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு அவர் விளையாடி இருக்கிறார். முதல் சில போட்டிகளில் விளையாட வரமாட்டேன் என கூறியதை அடுத்து அவரை ஐபிஎல் தொடருக்கே வேண்டாம் என்ற முடிவை ஆர் சி பி எடுத்து தவறு செய்தது.

திறமையும் புத்திசாலித்தனமும் இணைந்தால் அந்த பவுலர் நிச்சயம் ஒரு வேறு ஒரு உயரத்திற்கு செல்வார். அப்படிப்பட்ட திறமை கொண்ட ஹேசல் வுட் வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கு பெற்றால் நிச்சயம் பல கோடிக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது t20 போட்டி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு நடைபெறுகிறது.

Story first published: Thursday, September 12, 2024, 16:00 [IST]
Other articles published on Sep 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+