For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ashes: இதெல்லாம் ஒரு டார்கெட்டா? இங்கிலாந்தை கதற விட்ட ஆஸ்திரேலியா.. 31 ஓவரில் இலக்கை தொட்டு வெற்றி

சிட்னி: வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ந்து 4-வது முறையாக ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்து ஆஸ்திரேலியா ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில், இங்கிலாந்து நிர்ணயித்த 160 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. கடைசி நாள் ஆட்டத்தில், 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டிப் பிடித்து வெற்றியை வசப்படுத்தியது ஆஸ்திரேலியா. அலெக்ஸ் கேரி வெற்றி ரன்னை அடித்தார்.

AUS vs ENG Sydney Test Australia Wins Ashes 2025-26 Beats England 4-1 After Sydney Victory

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 384 ரன்களும், ஆஸ்திரேலியா 567 ரன்களும் எடுத்து இருந்தன. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 342 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தல் தனி ஆளாகப் போராடி 154 ரன்கள் குவித்தார். இது இங்கிலாந்துக்குச் சற்று ஆறுதலைத் தந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 'பாஸ்பால்' (Bazball) என்ற அதிரடி அணுகுமுறையுடன் இந்தத் தொடரை எதிர்கொண்டது. ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் அந்தத் திட்டம் எடுபடவில்லை.

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலேயே தொடரை இழந்த இங்கிலாந்து, மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் மட்டுமே ஆறுதல் வெற்றி பெற்றது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட், ஆர்ச்சர் மற்றும் அட்கின்சன் என முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டது அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.

இங்கிலாந்து வீரர்கள் மைதானத்திற்கு வெளியே பார்ட்டிகளில் ஈடுபட்டது மற்றும் போதிய பயிற்சியின்மை ஆகியவையும் கடும் விமர்சனத்திற்குள்ளாகின. கடைசிப் போட்டியிலும் 'ஸ்னிக்கோ' (Snicko) தொழில்நுட்பம் தொடர்பான டிஆர்எஸ் முடிவு இங்கிலாந்துக்கு எதிராக அமைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் போட்டியுடன் ஆஸ்திரேலிய அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு, களத்தில் இரு அணி வீரர்களும் மரியாதை செலுத்தினர். மைதானத்தை விட்டு வெளியேறும்போது அவர் உணர்ச்சிப் பெருக்கில் மைதானத்தை வணங்கி விடைபெற்றார்.

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விளையாடாத நிலையிலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சதங்கள் மற்றும் 31 விக்கெட்கள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சு ஆகியவை அணியின் வெற்றிக்கு வித்திட்டன.

4-1 என்ற படுதோல்வியுடன் நாடு திரும்பும் இங்கிலாந்து அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அடுத்து வரவுள்ள டி20 உலகக் கோப்பை மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Thursday, January 8, 2026, 9:27 [IST]
Other articles published on Jan 8, 2026
English summary
AUS vs ENG Sydney Test: Australia Wins Ashes 2025-26: Beats England 4-1 After Sydney Victory
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+