For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ashes: 123 வருடங்களுக்குப் பிறகு நடந்த சம்பவம்.. மெல்போர்னில் அரங்கேறிய சரித்திரம்.. கடும் விமர்சனம்

மெல்போர்ன்: 2025 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி நடந்த மெல்போர்ன் மைதானம் பேட்ஸ்மேன்களை அலறவிட்டது. 123 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சம்பவத்தையும் அரங்கேற்றி உள்ளது. இன்று துவங்கிய பாக்சிங் டே டெஸ்டின் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்து சாதனைப் புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடர் என்றாலே அனல் பறக்கும். ஆனால், மெல்போர்னில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகள் பறந்தன. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியோ 30 ஓவர்களுக்குள் 110 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

AUS vs ENG The Ashes 2025 MCG most wickets on Day 1 record After 123 Years

1902-க்கு அப்புறம் இப்போதான்!

ஆஸ்திரேலிய மண்ணில், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில், ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் விழுவது கடந்த 123 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. கடைசியாக 1902-ம் ஆண்டு இதே மெல்போர்ன் மைதானத்தில் நடந்த போட்டியில், முதல் நாளில் 25 விக்கெட்டுகள் விழுந்திருந்தன. அதன்பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இப்படியொரு சம்பவத்தை ஆஸ்திரேலிய மண் பார்த்ததில்லை.

வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் பங்கேற்ற போட்டிகளில் முதல் நாளில் 20 விக்கெட்கள் சாய்ந்து இருந்தன. ஆனால், அவை மெல்போர்ன் தவிர்த்து வெவ்வேறு மைதானங்களில் அரங்கேறி இருந்தன.

ஆஸ்திரேலியா 152: ஜோஷ் டங் மிரட்டல்

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு, இங்கிலாந்தின் இளம் வேகம் ஜோஷ் டங் சிம்மசொப்பனமாக விளங்கினார். 5 விக்கெட்டுகளை அவர் அள்ள, ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டது. 8-வது வீரராகக் களமிறங்கிய மைக்கேல் நேசர் 35 ரன்கள் எடுத்தது தான் அந்த அணியின் டாப் ஸ்கோராக இருந்தது.

"பரவாயில்லை, குறைந்த ஸ்கோரில் சுருட்டிவிட்டோம்" என்ற மிதப்பில் களமிறங்கிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை விட மோசமாகச் சொதப்பியது. வெறும் 29.5 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜோ ரூட் 15 பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆனார். மறுபுறம் ஹாரி புரூக், இது டெஸ்ட் மேட்ச் என்பதையே மறந்துவிட்டு 16 பந்துகளில் 41 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஆனால், அந்த ஆட்டம் மட்டும் இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி 100 ரன்களையே தொட்டு இருக்காது. இங்கிலாந்து அணியில் வெறும் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களைத் தொட்டனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. பந்துவீச்சில் கலக்கிய ஸ்காட் போலண்ட், நைட் வாட்ச்மேனாக களமிறங்கி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து நாளை முடித்து வைத்தார். தற்போது ஆஸ்திரேலியா 46 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போட்டிகள்:

25 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, மெல்போர்ன் (1901-02)
22 - ஆஸ்திரேலியா vs மேற்கிந்திய தீவுகள், அடிலெய்டில் (1951-52)
20 - ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா, மெல்போர்னில் (1931-32)
20 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, மெல்போர்ன் (1894-95)
20 - மெல்போர்னில் ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து (2025-26)

Story first published: Friday, December 26, 2025, 16:08 [IST]
Other articles published on Dec 26, 2025
English summary
AUS vs ENG The Ashes 2025: MCG most wickets on Day 1 record After 123 Years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+