Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாம்பவான் மெக்ராத் சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்த நாதன் லியோன்.. கும்ப்ளே ரெக்கார்டுக்கு குறி

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் நாதன் லியோன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் படைத்திருந்த நீண்ட கால சாதனையை முறியடித்து, புதிய வரலாற்றை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2-ம் நாள் அன்று (வியாழக்கிழமை), நாதன் லியோன் இந்த மைல்கல்லை எட்டினார்

AUS vs ENGL Nathan Lyon Surpasses Glenn McGrath New Record in Ashes 3rd Test vs England at Adelaide

தனது 141-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் லியோன், இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டை பவுல்டு அவுட் செய்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 564-வது விக்கெட்டைப் பதிவு செய்தார். இதன் மூலம், 563 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த கிளென் மெக்ராத்தின் சாதனையை முறியடித்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய அளவில் ஷேன் வார்னுக்கு (708) அடுத்தபடியாக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் இவர்தான்.

நாதன் லியோன் சாதனை படைத்த தருணம் மிகவும் சுவாரஸ்யமானது. தான் வீசிய முதல் ஓவரிலேயே ஆலி போப் மற்றும் பென் டக்கெட் என இருவரையும் வீழ்த்தி இங்கிலாந்து பேட்டிங் வரிசையை ஆட்டம் காண வைத்தார் லியோன்.

அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல்:

முத்தையா முரளீதரன் (இலங்கை) - 800
ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) - 708
ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) - 704
அனில் கும்ப்ளே (இந்தியா) - 619
ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) - 604
நாதன் லியோன் (ஆஸ்திரேலியா) - 564*
கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) - 563

கும்ப்ளே சாதனையும் காலி ஆகுமா?

38 வயதாகும் நாதன் லியோன், தற்போது உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார். "நான் எனது கெரியரின் சிறந்த ஃபார்மில் இருக்கிறேன், ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை," என்று அவர் தெரிவித்துள்ளார். இதே வேகத்தில் சென்றால், விரைவில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆகியோரின் சாதனைகளையும் அவர் முறியடிக்க வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, December 18, 2025, 9:29 [IST]
Other articles published on Dec 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+