For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 பேருமே தேவையில்லை.. கடைசி ஒருநாள் போட்டியில் நீக்கப்படும் வீரர்கள்..இந்திய அணியில் முக்கிய மாற்றம்

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்க உள்ள கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி வைட் வாஷ் செய்ய ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

திட்டம் என்ன

திட்டம் என்ன

இந்த நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி போட்டியில் எப்படியாவது வெற்றிபெறும் வகையில் இந்தியா இந்த திட்டத்தை வகுத்து உள்ளது. மொத்தமாக வைட் வாஷ் ஆனால் அவமானம் என்பதால் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்தில் இந்திய அணி உள்ளது.

சிக்கல்

சிக்கல்

இந்திய அணியில் தற்போது இருக்கும் பிரச்சனை கூடுதல் பேட்ஸ்மேன்கள் குறைந்த பவுலர்கள் என்பதுதான். இந்திய அணியில் மிடில் ஆர்டரில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருக்கிறார். மாறாக 5 பவுலர் மட்டுமே இருக்கிறார்கள். அதிலும் ஒருவர் ஜடேஜா. இதனால் இந்திய அணியின் பவுலர்கள் ஐந்து பேருமே 10 ஓவர் வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மோசம்

மோசம்

இதனால் இந்திய அணியின் பவுலிங் மோசமாக சொதப்பி வருகிறது. இந்த நிலையில்தான் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்த போட்டியில் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இறங்கினாலும் சரியாக ஆடுவது இல்லை. மாறாக இந்திய அணிக்குள் குல்தீப் யாதவ் கூடுதல் பவுலராக சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இதன் மூலம் இந்திய அணியில் சாஹல், ஜடேஜாவை சேர்த்து ஐந்து பவுலர்கள் இடம்பெறுவார்கள்.அதேபோல் மோசமாக பவுலிங் செய்து வரும் சைனி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இவருக்கு பதிலாக இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

நடராஜன்

நடராஜன்

இதனால் நாளை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆட உள்ள இந்திய அணியில் மயங்க், தவான், கோலி, ராகுல், பாண்டியா, ஜடேஜா, குல்தீப், சாஹல், நடராஜன், சமி, பும்ரா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறித்து.

Story first published: Tuesday, December 1, 2020, 15:20 [IST]
Other articles published on Dec 1, 2020
English summary
AUS vs IND: 2 Changes expected in Team India in the last ODI against Aussie tomorrow.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+