
பாடம்
இந்த டி 20 தொடரில் இந்திய அணி கற்றுக்கொடுத்த முதல் பாடம்.. எவ்வளவு பெரிய சரிவில் இருந்தும், யாரும் மீள முடியும் என்பதுதான். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்த பின் இந்த மொத்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமும் வாஷ் அவுட் ஆக போகிறது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் அந்த சரிவில் இருந்து இந்தியா மீண்டு வந்து வெற்றிபெற்றது.

நடராஜன்
இரண்டாவதாக நடராஜனின் வளர்ச்சி இன்னொரு பாடமாக அமைந்துள்ளது. உச்சத்திற்கு செல்லவும்,அசாத்திய சாதனைகளை செய்யவும் பின்புலம் தேவையில்லை. கடின உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் போதும். வாய்ப்புகள் தானாக அமையும் . நடராஜனின் வளர்ச்சியும், இந்திய அணியில் அவர் ஏற்படுத்தி உள்ள தாக்கமும் இதை உணர்த்துகிறது.

முக்கியம் இல்லை
எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியம் இல்லை, என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை நடராஜன் நிரூபித்துள்ளார். இன்னொரு பக்கம் இந்திய அணியில் ஷமி, பும்ரா, ரோஹித் ஆகியோர் இல்லாமலே டி 20 தொடரை இந்தியா வென்றுள்ளது. இளம் வீரர்களை கோலி சரியாக பயன்படுத்தி அணிக்கு வெற்றி தேடி தந்து உள்ளார்.

சின்ன வீரர்கள்
உங்களிடம் பெரிய பெரிய சாதனை வீரர்கள் இல்லை என்றாலும் இருக்கிறவர்களை வைத்தே சாதிக்க முடியும், உங்களிடம் இருக்கும் ரிசோர்ஸை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை கோலி நிரூபித்து உள்ளார். நான்காவதாக, பாண்டியாவின் குணம் மிகப்பெரியபாடமாக அமைந்துள்ளது. வறுமையான பின்னணியில் இருந்து வந்தவர் பாண்டியா. இந்த நிலையில் இந்திய அணிக்குள் வறுமையான பின்னணியில் இருந்து வந்த நடராஜனை அவர் சகோதரன் போல உடன் இருந்து பார்த்துக் கொள்கிறார்.

பாண்டியா
நடராஜனுக்கு மிகப்பெரிய மரியாதை கொடுத்து தான் வாங்கிய கோப்பையை கூட கொடுத்து அழகு பார்க்கிறார் வெளி உலகத்தில் பொறுப்பில்லாத நபர் என்று ஒரு காலத்தில் பேசப்பட்ட பாண்டியா தனது இமேஜை அப்படியே மாற்றி.. என்ன மனுஷன்யா என்று பெயர் பெற்றுள்ளார். ஒரு நபரை பற்றி உலகம் ஆயிரம் சொல்லும், ஆனால் அவர் எப்படிப்பட்டவர் என்பது அவரை தவிர யாருக்கும் தெரியாது என்பது பாண்டியாவின் சமீபத்திய செயல்பாடுகள் மூலம் தெரிய வருகிறது.

பெரிய பாடம்
கடைசியாக நடராஜனின் பணிவு இன்னொரு பாடமாக அமைந்துள்ளது. எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், வெற்றிகளை குவித்தாலும் பணிவை மட்டும் இழக்க கூடாது என்று கூறுவார்கள். நடராஜன் அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உயரம் செல்ல செல்ல பணிவாகும் இவரின் குணம் மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications