Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக ஓரங்கட்டிவிட்டார்.. நடராஜனால் கோலி எடுத்த பரபரப்பு முடிவு.. இந்திய அணியில் என்ன நடக்கிறது?

சிட்னி: இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக ஆட தொடங்கி உள்ள நிலையில் பும்ரா மொத்தமாக ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி தற்போது நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.இன்று நடக்கும் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது.

திட்டம்

திட்டம்

இன்று ஆடும் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே இந்திய அணி இன்றும் ஆட உள்ளது.இன்று விளையாடும் இந்திய அணியில் தவான், ராகுல், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், பாண்டியா, நடராஜன், ஷரத்துல் தாக்கூர், சாகர் சஹால், வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்று நடக்கும் போட்டியிலும் இந்திய அணியில் பும்ரா ஆடவில்லை.

ஓரம்கட்டப்பவிட்டார்

ஓரம்கட்டப்பவிட்டார்

இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக ஆட தொடங்கி உள்ள நிலையில் பும்ரா மொத்தமாக ஓரங்கட்டப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலியா மிகவும் வலுவான அணியாகும். இந்திய அணியின் பவுலிங் பும்ரா இல்லாமல் நிறைவு பெறாது. ஆனாலும் இந்த டி 20 தொடர் முழுக்க பும்ராவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

பும்ரா வாய்ப்பு

பும்ரா வாய்ப்பு

நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். மற்ற பவுலர்கள் சரியாக பவுலிங் செய்யவில்லை என்றாலும் நடராஜன் தொடர்ந்து சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இதனால் நடராஜனை நம்பி மொத்தமாக பும்ராவிற்கு கோலி ஓய்வு கொடுத்துள்ளார்.

ஏன்

ஏன்

பும்ராவிற்கு இந்த தொடர் முழுக்க ஓய்வு கொடுக்க என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது. டி 20 தொடரை விட டெஸ்ட் தொடரை மிக முக்கியமானதாக கோலி கருதுகிறார். இதனால் டெஸ்ட் தொடரின் போது பும்ரா தொடர்ந்து ஆட வேண்டும். அப்போது பும்ரா ஓய்வு எடுக்க முடியாது. அதே சமயம் இப்போது அவர் பார்மில் இல்லை.

ஓய்வு உதவும்

ஓய்வு உதவும்

இப்போது நன்றாக ஓய்வு எடுத்தால் டெஸ்ட் தொடரில் பும்ரா நன்றாக பந்து வீச முடியும். இதனால் அவருக்கு ஓய்வு கொடுத்து உள்ளனர்.டெஸ்ட் தொடரில் நடராஜன் இல்லாததால் பும்ரா அனைத்து போட்டியிலும் ஆடுவார். பும்ராவின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பும்ரா தற்போது ஓய்வில் உள்ளார். ஷமியும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறாமல் போனதற்கு இதுதான் காரணம் ஆகும்.

Story first published: Tuesday, December 8, 2020, 14:07 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+