
எப்படி
இந்த நிலையில் இந்திய அணியில் அறிமுகம் ஆகி இருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்காக நடிகர் அஜித் ரசிகர்கள் ஆஸ்திரேலிய மைதானத்தில் பெரிய அளவில் கட் அவுட்களை வைத்தது வைரலாகி உள்ளது. இந்திய அணியில் அறிமுகம் ஆகி இருக்கும் நடராஜன் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்தார்.

செம
அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார். நடராஜனை தமிழகம் மட்டுமின்றி மொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில்தான நடராஜனுக்காக நடிகர் அஜித் ரசிகர்கள் ஆஸ்திரேலிய மைதானத்தில் பெரிய பெரிய கட் அவுட்களை காட்டி உள்ளனர்.

கட் அவுட்
இந்திய அணியில் கலக்கி வரும் நடராஜனை வாழ்த்துகிறோம் என்று அஜித் ரசிகர்கள் பெரிய பெரிய கட் அவுட்களை காட்டி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர். இதை தொடர்ந்து டிவிட்டரில் இருக்கும் அஜித் ரசிகர்கள் #ThalaFansWishesNATARAJAN என்ற டேக்கை டிரெண்ட் செய்தனர்.

டிரெண்ட்
நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து இணையம் முழுக்க வரிசையாக பல ஆயிரம் டிவிட்களையே அஜித் ரசிகர்கள் செய்தனர். இதனால் சில நிமிடங்களில் #ThalaFansWishesNATARAJAN என்ற டேக் தேசிய அளவில் டிரெண்டானது. நடராஜன் தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டும், இந்திய அணியில் அவர் நீடித்து இடம்பிடிக்க வேண்டும் என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications