அவர் வேண்டாம்.. முக்கிய வீரரை கழற்றி விடும் பிசிசிஐ.. நடராஜனுக்கு அடிக்க போகும் இன்னொரு அதிர்ஷ்டம்?
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்..
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டு அணிகளும் யார் பலசாலி என்பதை நிரூபிப்பதற்கான கடுமையான போட்டி நடந்து வருகிறது.
இரண்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பின் தற்போது நடந்து வரும் டி 20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

டெஸ்ட்
தற்போது இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. மூன்றாவது டி 20 போட்டிக்கு பின் இரண்டு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் இஷாந்த் சர்மா கலந்து கொள்ள மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

கலந்து கொள்ள மாட்டார்
ஐபிஎல் தொடரின் போது இஷாந்த் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அவர் ஐபிஎல் முழுக்க ஆடவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

டெஸ்ட் வாய்ப்பு
இவர் டெஸ்ட் தொடரில் ஆட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. அதேபோல் இவருக்கு தற்போது காயமும் சரியாகிவிட்டது. ஆனால் இவர் இன்னும் ஆஸ்திரேலியா செல்லவில்லை. இவர் பயிற்சி ஆட்டங்களிலும் ஆடவில்லை. பிசிசிஐ விதிப்படி இவர் டெஸ்ட் அணியில் ஆட வேண்டும் என்றால் பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இல்லை
ஆனால் இஷாந்த் சர்மா பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இவர் இன்னும் ஆஸ்திரேலியாவிற்கு செல்லவில்லை. இதனால் இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது. இவரை ஆஸ்திரேலியா வர வேண்டாம் என்று பிசிசிஐ கூறியதாகவும் தகவல்கள் வருகிறது. இந்த நிலையில் டெஸ்ட் அணியில் நடராஜன் வருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

நடராஜன்
தற்போது டெஸ்ட் அணியில் பவுலிங்கிற்காக சமி, பும்ரா, சிராஜ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் உள்ளனர். அதேபோல் ஜடேஜா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். ஒருநாள், டி 20 போட்டிகளில் நன்றாக ஆடிய நடராஜனை கோலி டெஸ்ட் அணியிலும் கொண்டு வருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் அணியில் ஜடேஜாவிற்கு மாற்றாக நடராஜன் இறக்கப்படுவாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

நடராஜன் வருவாரா
வீரர்கள் காயம் என்று கூறிதான் ஒருநாள் மற்றும் டி 20 அணியில் நடராஜன் அணிக்குள் வந்தார். அதேபோல் ஜடேஜா காயம் என்பதாலும், இஷாந்த் சர்மா மீண்டும் அணிக்கு திரும்ப முடியாது என்பதாலும் நடராஜனை டெஸ்ட் அணிக்குள் எடுப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. நடராஜன் டெஸ்ட் அணிக்குள் வந்தால், அவர் இந்திய அணியில் 'ஏ' தர வீரராக மாற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications