தம்பி.. நீ இல்லைன்னு ஒரு சின்ன வருத்தம்.. இந்திய அணியின் வெற்றி.. அஸ்வின் என்ன இப்படி சொல்லிட்டாரே!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் வெற்றிக்கு பின் மூத்த வீரர் அஸ்வின் செய்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட அவமானத்திற்கு காரணமான தோல்விக்கு சிறப்பான பதிலடியை இந்திய அணி கொடுத்துள்ளது.
முக்கியமாக ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரையும் அரை சதம் கூட எடுக்க விடாமல் இந்திய பவுலர்கள் திறமையாக கட்டுப்படுத்தி உள்ளனர்.

சிறப்பு
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் என்று பார்த்தால் அது அஸ்வினின் பவுலிங் என்றும் கூறலாம். முதல் இன்னிங்சில் இவர் ஸ்மித் விக்கெட் உட்பட 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்தது இங்குதான்.

விக்கெட்
இரண்டாவது இன்னிங்சிலும் 2 விக்கெட் எடுத்தார். அதேபோல் இந்திய அணியை அவ்வப்போது வழி நடத்தினார். துணை கேப்டன் கிடையாது என்றாலும் ஒரு துணை கேப்டனுக்கு உண்டான அனைத்து பணிகளையும் அஸ்வின் செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி இல்லாத போதும் கூட இந்திய பவுலர்கள் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெற வைத்துள்ளனர்.

வெற்றி பெற வைத்தனர்
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றியை பாராட்டி இந்திய வீரர் முகமது ஷமி டிவிட் செய்து இருந்தார். எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள், முக்கியமாக ரஹானே, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் ஆகியோர் நன்றாக ஆடினார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அஸ்வின் இதற்கு சிறப்பாக பதில் அளித்துள்ளார்.
பதில்
அதில் மிக்க நன்றி தம்பி, நீ இல்லைன்னு ஒரு சின்ன வருத்தம் என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளார். இந்திய வீரர் முகமது ஷமி காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இன்னும் 2 வாரங்களுக்கு ஷமி ஓய்வு எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications