
பாராட்டு
இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் நடராஜனை ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும் பாராட்ட தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் நடராஜனை புகழ்ந்து பாராட்ட தொடங்கி உள்ளனர். பொதுவாக பிற நாட்டு வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவ்வளவு எளிதாக பாராட்டாது. முக்கியமாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களை அவ்வளவு எளிதாக புகழ்ந்து விடாது.

கோலி
ஆனால் அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கூட கோலியை கடவுள் போல பாராட்டி புகழ்ந்து வருகிறது. தனி சிறப்பு ஹோட்டல் அறை தொடங்கி பல சிறப்பு வசதிகளை கோலிக்காக செய்தது. கோலியை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது நடராஜனையும் ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும் பாராட்ட தொடங்கி உள்ளது.

நடராஜன்
தமிழக வீரர் நடராஜன் மிகவும் சிறப்பாக ஆடி வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகமே அவரை யார்க்கர் கிங் என்று குறிப்பிட்டுள்ளது.இந்தியா தொடரை வென்றுவிட்டது.. நடராஜன் மற்றும் பாண்டியாவிற்கு நன்றிகள் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. பாண்டியா , நடராஜன் இருவரின் நேற்றைய ஆட்டத்தையும் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் புகழ்ந்து தள்ளி உள்ளது.

ஊடகங்கள்
ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஒரு படி மேலே போய் நடராஜன்தான் புதிய யார்க்கர் கிங், பும்ராவின் இடத்தை அவர் நிரப்பி விட்டார். நடராஜன் இந்த வருடத்தின் சிறந்த கண்டிபிடிப்பு என்று புகழ்ந்து வருகின்றன. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் இருந்து சென்ற நடராஜனை கிரிக்கெட் உலகமே தற்போது தூக்கி வைத்து கொண்டாட தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











