Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் சூட்சமம்.. இந்திய அணிக்கு எதிர்பாராத இடத்தில் அணை போட்ட ஆஸ்திரேலியா.முரட்டு சம்பவம் இருக்கு

சிட்னி: இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றிபெற என்ன காரணமென்று விவரங்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பின் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் சூட்சமம் தெரிய வந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கொஞ்சம் சரிவை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்துள்ள நிலையில் பிசிசிஐ அணி நிர்வாகம் இந்திய அணி மீது கோபத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 என்று இந்தியா இழந்துள்ளது. தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.

எப்படி

எப்படி

இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றிபெற என்ன காரணமென்று விவரங்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய பிட்ச்களில் அந்த அணி நிர்வாகம் செய்த மாற்றம்தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்கு பின் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் சூட்சமம் தெரிய வந்துள்ளது.

மாற்றம்

மாற்றம்

ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு போட்டியும் சிட்னி மைதானத்தில் நடந்தது. தற்போது நடக்கும் போட்டி கான்பெரா மைதானத்தில் நடக்கிறது. இந்த மூன்று போட்டியிலும் பந்து கொஞ்சம் கூட ஸ்விங் ஆகவில்லை. பந்து ஸ்விங் ஆகாத வகையில் தயார் செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய பிட்ச்கள் எல்லாம் இதற்காக மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்திய பவுலர்கள்

இந்திய பவுலர்கள்

இந்திய பவுலர்கள் எப்போதும் ஸ்விங் பவுலிங்கை நம்பித்தான் இருப்பார்கள். ஷமி, பும்ரா இருவரும் ஸ்விங் செய்தால் எளிதாக விக்கெட் எடுப்பார்கள். ஆனால் தற்போது பிட்ச் ஒத்துழைக்காத காரணத்தால் இரண்டு பேருமே பந்தை ஸ்விங் செய்து விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இங்குதான் இந்திய அணியின் பவுலிங் சொதப்பி உள்ளது.

சொதப்பல்

சொதப்பல்

இந்திய அணிக்கு எதிராக திட்டமிட்டு ஆஸ்திரேலிய அணி பிட்சை மாற்றியுள்ளது. மாறாக ஆஸ்திரேலிய பவுலர்கள் ஸ்விங் பவுலிங்கை நம்பாமல் முழுக்க முழுக்க ஷார்ட் பந்துகளை மட்டுமே நம்பி பவுலிங் செய்துள்ளனர். இந்திய அணியின் டாப் ஆர்டர் இரண்டு போட்டியிலும் விக்கெட்டுகளை இழந்தது ஷார்ட் பந்தில்தான்.

திணறியது

திணறியது

அந்த அளவிற்கு இந்திய அணி ஷார்ட் பந்துகளில் சொதப்பியது. இதன் மூலம் பந்தை ஸ்விங் செய்யாமலே ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை எடுத்தது. ஆனால் இந்திய அணி பந்தை ஸ்விங்கும் செய்ய முடியவில்லை. அதேபோல் ஷார்ட் பந்தும் போடவில்லை. இதுவே இந்திய அணியின் பவுலிங் சொதப்பலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த அளவிற்கு இந்திய அணி ஷார்ட் பந்துகளில் சொதப்பியது. இதன் மூலம் பந்தை ஸ்விங் செய்யாமலே ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை எடுத்தது. ஆனால் இந்திய அணி பந்தை ஸ்விங்கும் செய்ய முடியவில்லை. அதேபோல் ஷார்ட் பந்தும் போடவில்லை. இதுவே இந்திய அணியின் பவுலிங் சொதப்பலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இன்று மேட்ச்

இன்று மேட்ச்

இன்று நடக்கும் போட்டியிலும் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய அணி ஷார்ட் பந்துகளை போட்டு வருகிறது. இரண்டு மேட்சிலும் விராட் , மயங்க், ராகுல், ஷ்ரேயாஸ் ஆகியோர் ஷார்ட் பந்துகளில் அவுட் ஆனதால் அதே ஸ்டைலை ஆஸ்திரேலிய அணி கடைப்பிடித்து வருகிறது... இதனால் இன்றும் ஆஸ்திரேலியா முரட்டு சம்பவம் செய்ய வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, December 2, 2020, 10:38 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+