
ஆதிக்கம்
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.

முன்னிலை
ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 82 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் தேநீர் இடைவேளையின் போது மழை பெய்து குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 10 நிமிடம் தடை பட்டது. அதன்பின் மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது மைதானத்திற்குள் நிறைய குப்பைகள் பறந்து வந்தது.

குப்பை
அதிக வேகத்தில் காற்று வீசியதால் மைதானத்திற்கு வெளியே இருந்த குப்பைகள், வெள்ளை நிற பேப்பர்கள் எல்லாம் பறந்து வந்து மைதானத்திற்கு உள்ளே சென்றது. சரியாக ஜடேஜா பேட்டிங் செய்யும் போது இதேபோல் வெள்ளை நிற பேப்பர் ஒன்று உள்ளே வந்தது. இதனால் அவர் சில நிமிடம் குழம்பி போனார்.

சூழ்நிலை
அதன்பின் தொடர்ந்து இதேபோல் நிறைய குப்பைகள் மைதானத்திற்குள் வந்தது. பின் காற்றும் வேகமாக அடித்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் போட்டி மீண்டும் நிறுத்தப்பட்டு, பின் இரண்டாம் நாள் ஆட்டம் மொத்தமாக முடிவிற்கு வந்தது. மைதானத்தில் குவிந்த குப்பைகளால் சில நிமிடம் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications