Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது போன்ற தவறுகளை ஏற்கவே முடியாது.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட கோலி.. மைதானத்தில் பரபர சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த டி 20 கிரிக்கெட் போட்டியில் முக்கியமான தவறு ஒன்றை செய்துவிட்டதாக கேப்டன் கோலி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

அதே சமயம் இரண்டு அணிகளுக்கு இடையிலான டி 20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. நேற்று நடந்த கடைசி டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.

நேற்று நடராஜன்

நேற்று நடராஜன்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நேற்று நடராஜன் எடுக்க வேண்டிய ஒரு விக்கெட் கோலி செய்த தவறால் மிஸ்ஸாகிவிட்டது. இவர் போட்ட 11வது ஓவரின் 4வது பந்தில் விக்கெட் விழுந்து இருக்க வேண்டியது. அந்த பந்தில் எல்பிடபிள்யூ விழுந்து இருக்க வேண்டியது. மேத்யூ வேட் பேட்டிங் செய்யும் போது இந்த விக்கெட் விழுந்தது.

கோலி டிஆர்எஸ்

கோலி டிஆர்எஸ்

இதையடுத்து கோலி டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டார். ஆனால் கோலி 10 நொடிகள் முடிந்து, பெரிய திரையில் ரீப்ளே எல்லாம் காட்டப்பட்ட பின்புதான் எல்பிடபிள்யூ ரிவ்யூ கேட்டார். இதனால் அந்த ரிவ்யூ ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெரிய திரையில் கட்டப்பட்ட ரீப்ளேவில் மேத்யூ வேட் விக்கெட் என்பது உறுதியாக தெரிந்தது.

தாமதம்

தாமதம்

கோலி செய்த தாமதத்தால் இந்த விக்கெட் விழவில்லை. இதை தற்போது கோலியும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.சரியான நேரத்தில் டிஆர்எஸ் கேட்காதது எங்கள் தவறுதான். நாங்கள் வேகமாக செயல்பட்டு இருக்கவேண்டும்.

 சரியான நேரம்

சரியான நேரம்

சரியான நேரத்தில் டிஆர்எஸ் கேட்டு இருந்தால் 30-40 ரன்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் நாங்கள் தவறு செய்து விட்டோம். களத்தில் நிறைய கேட்ச் விடப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் கூடுதல் ரன்கள் சென்றது.

அணி நிர்வாகம்

அணி நிர்வாகம்

அணி நிர்வாக ரீதியாக சில தவறுகளை செய்துவிட்டோம். இதுதான் தோல்விக்கு காரணமாக இருந்தது. இனி வரும் போட்டிகளில் இது போன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும், என்று கேப்டன் கோலி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, December 9, 2020, 10:19 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+