ஹர்திக் சொன்ன அந்த வார்த்தை.. ஆடிப்போன நடராஜன்.. டிரெஸ்ஸிங் ரூமில் கொண்டாடிய அணி.. என்ன நடந்தது?
சிட்னி: இந்திய அணியில் சிறப்பாக ஆடி வரும் நடராஜன் குறித்து முன்னணி வீரர் ஹர்திக் பாண்டியா சொன்ன விஷயம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
இந்திய அணியில் ஆடி வரும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட், அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார்.
நேற்று இந்திய பவுலர்கள் எல்லோரும் அதிக ரன் கொடுத்தனர். ஆனால் நடராஜன் மட்டுமே ரன் செல்வதை கட்டுப்படுத்தி, ஆட்டத்தை கட்டுக்குள் வைத்து இருந்தார்.

ஆட்டத்தை கட்டுப்படுத்தினார்
இந்த நிலையில் நடராஜன் குறித்து முன்னணி வீரர் ஹர்திக் பாண்டியா சொன்ன விஷயம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. பாண்டியா தனது பேச்சில், நான் நடராஜன் குறித்து இங்கு பேச வேண்டும். இன்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற தகுதியான நபர் அவர்தான்.

எப்படி
அவர் சிறப்பாக பவுலிங் செய்தார். மற்ற பவுலர்கள் ரன் கொடுத்த போது அவர் சிறப்பாக பவுலிங் செய்து ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். அவர் மிகவும் சிறப்பாக ஆடினார்.

எளிமை
அவர் மிகவும் எளிமையாக இருக்கிறார். எளிமையாக திட்டங்களை வகுக்கிறார். அது பெரிய அளவில் வெற்றிபெறுகிறது. இப்படி எளிமையாக இருக்கும் நபர்கள் எளிதாக கவர்ந்துவிடுகிறார்கள். அவரின் ஆட்டம் என்னை கவர்ந்துவிட்டது, என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

கொண்டாட்டம்
பாண்டியா மட்டுமின்றி, நேற்று டிரெஸ்ஸிங் ரூமிலும் நடராஜன் பாராட்டப்பட்டு உள்ளார். டிரெஸ்ஸிங் ரூமில் இவரின் பவுலிங் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்கள். முக்கியமாக இந்திய அணியின் கேப்டன் கோலி நடராஜனை டிரெஸ்ஸிங் ரூமில் பாராட்டி பேசி இருக்கிறார்.

மகிழ்ச்சி
இந்திய அணியும் கிரிக்கெட் உலகமும் தன்னை இப்படி கொண்டாடுவதை பார்த்து நடராஜன் ஆடிப்போய் உள்ளார். பும்ராவிற்கு பின் அறிமுக வீரர் ஒருவருக்கு இப்போதுதான் இவ்வளவு பெரிய மரியாதை அளிக்கப்படுகிறது. மொத்த இந்திய அணியும் இவருக்கு முழு ஆதரவு அளிக்கிறது. இதனால் நடராஜன் பெரிய அளவில் மகிழ்ச்சியிலும், நம்பிக்கையிலும் இருக்கிறார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications