For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிர்பாராத திருப்பம்.. மிகப்பெரிய தியாகம் செய்த இளம் வீரர்.. தோனியின் இடத்தை நிரம்ப போவது இவர்தான்!

சிட்னி: இந்திய அணியில் தற்போது கலக்கி வரும் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் ஆர்டர் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் திருப்பங்களுக்கு பஞ்சம் இன்றி சென்று கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் இந்த தொடரில் இந்திய அணி சொதப்புவது போல இருந்தாலும் போக போக அதிரடியாக ஆடி ஆட்டத்தை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது.

இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது. ஆனாலும் மனம்தளராமல் அதிரடியாக ஆடி டி 20 தொடரை கைப்பற்றி உள்ளது.

எப்படி

எப்படி

இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா அனைத்து போட்டியிலும் முக்கிய காரணமாக இருந்தார். கடைசி கட்டத்தில் இவர் இறங்கி காட்டும் அதிரடி காரணமாக இந்திய அணி தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. ஓப்பனிங் பேட்டிங் இந்திய அணியில் சொதப்பி வரும் நிலையில் ஹர்திக் - ஜடேஜா ஜோடிதான் இந்த அணிக்கு வெற்றியை தேடி தருகிறது.

செம ஆட்டம்

செம ஆட்டம்

கடந்த வருடம் ஆபரேஷன் செய்யப்பட்ட பின் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்வதை நிறுத்திவிட்டார். 2வது ஒருநாள் போட்டியில் மட்டுமே இவர் நான்கு ஓவர்கள் வீசினார். ஆல் ரவுண்டர் என்ற நிலையில் இருந்து மாறி, தற்போது ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்ற நிலைக்கு சென்றுள்ளார். இவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இனிமேல் இவர் பவுலிங் செய்வது ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 மருத்துவர்கள் அறிவுரை

மருத்துவர்கள் அறிவுரை

இதன் காரணமாக தற்போது மொத்தமாக பவுலிங் செய்வதை தியாகம் செய்துள்ளார். ஆனால் இவர் பவுலிங் செய்யவில்லை என்றால் இந்திய அணியில் இடம்பிடிப்பது கடினம். இதன் காரணமாக தன்னை முழு நேர பேட்ஸ்மேனாக மாற்றியுள்ளார். தன்னுடைய ஸ்டைலை மாற்றிய பின் இவர் புதிய விஸ்வரூபம் எடுத்துள்ளார். மிக சிறந்த பேட்ஸ்மேன் என்ற நிலையை எட்டியுள்ளார்.

செம

செம

ஒருநாள் தொடரிலும் சரி , டி 20 தொடரிலும் சரி இவரின் பேட்டிங் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இதன் காரணமாக விரைவில் இவரின் பேட்டிங் ஆர்டர் 6ல் இருந்து 4வது இடத்திற்கு மாற்றப்படலாம் என்று கூறுகிறார்கள். அதாவது கோலிக்கு பின் பாண்டியா இறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கடைசியில் இவர் இறங்கி பேட்டிங் செய்யும் போது அதிக பந்துகள் இருப்பது இல்லை.

பந்துகள் இல்லை

பந்துகள் இல்லை

இதன் காரணமாக இவர் சில போட்டிகளில் சதம் அடிக்க முடியாமல் போனது. இதனால் இனி வரும் நாட்களில் இவர் 4வது இடத்தில் இறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தோனியின் பேட்டிங் ஸ்தானத்தை இவர்தான் நிரப்ப போகிறார். இந்திய அணியின் புதிய பினிஷர் இவர்தான். இனி இவர் மீது நம்பிக்கை வைக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Story first published: Monday, December 7, 2020, 13:01 [IST]
Other articles published on Dec 7, 2020
English summary
AUS vs IND: Hardik Pandya becomes a complete batsman, May fill in for Dhoni in the team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+