"ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்".. அவர் வந்ததை பார்த்தீர்களா?.. ஹர்திக் பாண்டியா செய்த காரியம்.. பின்னணி!
சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் "ஆல் ரவுண்டர்'' ஹர்திக் பாண்டியா ஆடிய விதம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டி தற்போது சிட்னியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தொடக்கத்தில் சொதப்பிய இந்திய அணி கொஞ்சம் நிதானம் காட்டி வருகிறது.
சிட்னியில் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 374 ரன்களை எடுத்தது.375 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா நிதானமாக ஆடி வருகிறது.

எப்படி
இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடி சொதப்பினார்கள். கோலி 21, மயங்க் அகர்வால் 22, ஷ்ரேயாஸ் 2, ராகுல் 12 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் சீட்டு கட்டு போல சரிந்தது.

ஆனால்
ஆனால் அதன்பின் இறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடினார். விக்கெட் விழுகிறதே என்று கவலை இன்றி ஹர்திக் பாண்டியா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சரியாக செய்தார். அதே சமயம் விக்கெட்டை இழக்காமல் நிலையாக ஆடி வந்தார்.

செம
இதுவரை நடந்துள்ள போட்டியில் ஹர்திக் பாண்டியா 63 பந்தில் 78 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி அடக்கம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்ற பெயரில் இறங்கினார். இன்று அவர் பவுலிங் செய்யவில்லை.

காலில் ஆபரேஷன்
காலில் செய்யப்பட்ட ஆபரேஷனுக்கு பின் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்வதை நிறுத்துவிட்டார். காயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் பாண்டியா பவுலிங் செய்வது இல்லை. இதனால் இன்று அவர் களத்திற்கு வரும் போதே பவுலர்கள் போடும் ஷூவை போடாமல் சாதாரண ஷூவை போட்டு வந்தார். அப்போதே இவர் இன்று ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்று உறுதியாகிவிட்டது.

செம
பவுலிங் செய்வதை நிறுத்திய பின் ஹர்திக் பாண்டியா பேட்டிங் பெரிய அளவில் முன்னேறி உள்ளது. மும்பை அணிக்கும் ஐபிஎல் தொடரில் இவர் பேட்டிங் மட்டுமே செய்தார். இந்த நிலையில் இந்திய அணியிலும் இவர் இதேபோல் பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications