வொண்டர் பேட்.. பாண்டியா கொண்டு வந்த புதிய அஸ்திரம்.. நேற்று ஆட்டத்திற்கு பின் இப்படி ஒரு பின்னணியா?
சிட்னி: நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பயன்படுத்திய பேட் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டிற்கு 194 ரன்கள் எடுத்தது.
இந்த வலுவான ஸ்கோரை நோக்கி களமிறங்கிய இந்தியா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. கடைசி ஓவரில் பாண்டியா இரண்டு சிக்ஸ் அடித்து 195 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

எத்தனை
நேற்று போட்டியில் பாண்டியா 22 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் அடக்கம். கடைசி இரண்டு ஓவர்களில் ருத்ர தாண்டவம் ஆடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார் .

வெற்றி
இந்த போட்டியில் முதல் 15 பந்துகளில் பாண்டியா சரியாக அடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இவர் பந்தை சரியாக கணிக்க முடியவில்லை. அதேபோல் இவர் எவ்வளவு வேகமாக ஷாட் அடித்தும் பந்து பவுண்டரிக்கு செல்லவில்லை.

மாற்றினார்
இவர் பேட்டில் கோளாறு இருப்பது போல தெரிந்தது. இதனால் உடனே அவர் பேட்டை மாற்றினார். இவர் பேட்டை மாற்றிய அடுத்த பந்தில் இருந்து சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து வெளுத்தார். இவரின் புதிய பேட்டை எல்லோரும் வொண்டர் பேட் என்று அழைக்கிறார்கள்.

புதிய பேட்
இதற்கு முன் ஹர்திக் பாண்டியா வேறு பேட் பயன்படுத்தி வந்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த பேட் உடைந்து போனது. கடந்த 3 வருடமாக பாண்டியா அந்த பேட்டைதான் பயன்படுத்தி வந்தார்.

செம
அது உடைந்த பின் அவர் இரண்டு பேட்களை மாற்றினார். இரண்டும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.தற்போது ஹேண்டில் நீளமாக இருக்கும் புதிய பேட்டை இறக்கி உள்ளார். இதனால் அவரால் எளிதாக வைட் பந்துகளை கூட சிக்ஸ் அடிக்க முடிகிறது. இதுதான் தனது அதிரடி ஆட்டத்திற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications