Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேரடியாக கோலியிடம் சென்று.. மன்னிப்பு கேட்ட ரஹானே.. எதுவும் சொல்லாத கேப்டன்.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் நான் கோலியிடம் சென்று மன்னிப்பு கேட்டேன் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரஹானே குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. இதற்காக கோலி இந்தியா திரும்பி உள்ளார்.

இதனால் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார். ரஹானே இந்திய கேப்டனாக இருப்பார்.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ரஹானே இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தது துரதிஷ்டவசமானது. அந்த போட்டிக்கு பின் நான் கோலியிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். ஆனால் கோலி எதுவும் சொல்லவில்லை. அவர் எங்கள் மீது கோபமாக இல்லை.

மன்னிப்பு

மன்னிப்பு

எங்களுக்கு கோலி ஊக்கம் அளித்தார். இந்தியா திரும்பும் முன் கோலி எங்களிடம் பேசினார். ஆட்டம் மீது கவனம் செலுத்துபடி எங்களிடம் கூறினார். அணியாக இணைந்து ஒற்றுமையாக விளையாட வேண்டும் என்று எங்களிடம் கோலி குறிப்பிட்டார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்திய அணி எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். சில சமயங்கள் நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். ஆனால் அதை பற்றி கவலைபடாமல் நாம் கடந்து செல்ல வேண்டும்.

நிலைமை

நிலைமை

கிரிக்கெட் போட்டியில் எதுவும் நடக்கும். கடந்த போட்டி மனரீதியாக எங்களுக்கு கடுமையாக இருந்தது. கோலி மட்டும் முதல் போட்டியில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் முடிவு மாறி இருக்கும். அன்றைய போட்டிக்கு பின் இதனால் கோலியிடம் சென்று மன்னிப்பு கேட்டேன், என்று ரஹானே குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, December 25, 2020, 18:24 [IST]
Other articles published on Dec 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+