Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இவ்வளவு மோசமா இருக்கு.. வெளிச்சத்திற்கு வந்த பிரச்சனை.. இந்திய அணி என்ன செய்ய போகிறதோ?

சிட்னி: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி மோதிய டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம் பெரிய அளவில் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் திருவிழா போல நடந்து வருகிறது. ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என்று மிக நீண்ட தொடர் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடந்து வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஆனால் டி 20 தொடரை இந்த 2-0 என்ற கணக்கில் வென்றது.

வெற்றி

வெற்றி

இந்த நிலையில் இன்னொரு பக்கம் இரண்டு நாட்டு ஏ அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்டு அணிகளுக்கு இடக்கையிலான டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டம் போல இந்த போட்டி நடைபெற்றது. இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் இந்த ஏ அணியில் இடம்பெற்று இருந்தனர்.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி மோதிய போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம் பெரிய அளவில் அதிர்ச்சி அளித்துள்ளது. முக்கியமாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ஒப்பனர்கள் மிக மோசமாக ஆடினார்கள்.

மோசம்

மோசம்

முதல் இன்னிங்சில் இந்திய அணியின் இரண்டு ஒப்பனர்களும் டக் அவுட் ஆனார்கள். சுப்மான் கில், பிரித்வி ஷா இரண்டு பேருமே டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். இவர்கள் சரிந்த பின் புஜாரா, ரஹானே ஆகிய இரண்டு அனுபவ வீரர்கள் மட்டுமே இந்திய அணியை சரிவில் இருந்து காத்தனர்.

 இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸ்

இன்னொரு பக்கம் இரண்டாவது இன்னிங்சிலும் இரண்டு ஒப்பனர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். பிரித்வி ஷா 19 ரன்களுக்கும், சுப்மான் கில் 29 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள். இந்திய அணியில் எதிர்காலத்தில் ஓப்பனிங் வீரர்களாக இறங்க வாய்ப்புள்ளவர்கள் என்று கருதப்பட்ட இரண்டு பேருமே இப்படி மோசமாக ஆடியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

சொதப்பல்

சொதப்பல்

இந்திய அணியில் ரோஹித், மயங்க் அகர்வால், தவான், கே. எல் ராகுல் ஆகிய நான்கு பேரில் யாராவது ஒருவர் ஓப்பனிங் ஆடவில்லை என்றாலும் டாப் ஆர்டர் மோசமாக சொதப்பிவிடும் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. அதிகம் நம்பிக்கை வைக்கப்பட்ட இரண்டு இளம் வீரர்களும் கடந்த ஒன்றரை வருடமாக சரியாக ஆடுவது இல்லை.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரிலும் இவர்கள் இருவரும் சரியாக ஆடவில்லை. அதிலும் பிரித்வி ஷா ஆட்டம் அதிர்ச்சி அளித்து வருகிறது. முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றால், காயம் அடைந்தால் இந்திய அணியின் ஓப்பனிங் சொதப்பிவிடும் என்பது உறுதியாகி உள்ளது.

எதிர்காலம்

எதிர்காலம்

இந்திய அணியில் எதிர்காலத்தில் ஓப்பனிங் வீரர்களுக்கான பிரச்சனை வர வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணி கில், பிரித்வி ஷா போன்ற வீரர்களை மட்டுமே இனியும் நம்பி இருக்க கூடாது. மாறாக படிக்கல் போன்ற வீரர்களையும் சோதனை செய்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முடிவு

முடிவு

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய ஏ அணி 247/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆஸ்திரேலிய ஏ அணி 306/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின் இந்திய ஏ அணி 189/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆஸ்திரேலிய அணி 52/1 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் டை ஆனது.

Story first published: Tuesday, December 8, 2020, 14:44 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+