நேற்று நடந்த சம்பவம்.. இப்படி கிளம்பி சென்றால் என்ன அர்த்தம்.. நீங்கதான் இந்திய அணியின் எதிர்காலமா?
சிட்னி: இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி 20 தொடரில் வென்றுள்ள நிலையில் இன்னொரு பக்கம் இந்திய ஏ அணியின் பேட்டிங் மிக மோசமாக சொதப்பி வருகிறது. இந்திய அணியின் எதிர்காலம் என்று கருதப்பட்ட இரண்டு பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக ஆடி வருகிறார்கள்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மிக நீண்ட கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
ஆனால் டி 20 தொடரில் இந்தியா உடனே அதிரடியாக மீண்டு வந்தது. டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா அதிரடி வெற்றிபெற்றுள்ளது.

வெற்றி
டி 20 தொடரில் வென்றுள்ள நிலையில் இன்னொரு பக்கம் இந்திய ஏ அணியின் பேட்டிங் மிக மோசமாக சொதப்பி வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர்கள் மிக மோசமாக ஆடி வருகிறார்கள். முக்கியமாக இந்திய ஏ அணியின் ஓப்பனிங் வீரர் சுப்மான் கில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளார்.

அதிர்ச்சி
இவர் ஐபிஎல் தொடரில் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் தொடர் முழுக்க சுப்மான் கில் மோசமாக ஆடினார். இந்திய அணிக்காக இவர் களமிறங்கிய மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சரியாக ஆடாமல் ஏமாற்றம் அளித்தார். முதல் தர போட்டிகளில் நன்றாக ஆடினாலும், இந்திய அணிக்கு தேர்வாகும் போது மோசமாக சொதப்புகிறார்.

எப்படி
இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் ஏமாற்றம் அளித்துள்ளார். இன்னொரு பக்கம் பிரித்வி ஷாவும் டக் அவுட் ஆகியுள்ளார். ஐபிஎல் தொடர் முழுக்க இவர் மோசமாக ஆடினார். அந்த தொடர் முழுக்க இவர் பல போட்டிகளில் மோசமாக சொதப்பி டக் அவுட் ஆனார்.

தொடர்கிறது
தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் இவர் மோசமாக விளையாடி டக் அவுட் ஆகியுள்ளார். இவரின் மோசமான பார்ம் தொடர்ந்து கொண்டு இருப்பது இந்திய அணியின் தேர்வுக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்திய அணியின் எதிர்காலம் என்று கருதப்பட்ட இரண்டு பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக ஆடி வருகிறார்கள்.

தவான்
தவான், ரோஹித், ஆகியோர் ஓய்வு பெற்ற பின் இவர்கள் இருவரில் ஒருவர்தான் இந்திய அணிக்கு ஓப்பனிங் வீரராக களமிறங்க வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டு பேருமே இந்திய ஏ அணியில் மோசமாக சொதப்பி வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு வீரர்கள் இப்படி அடுத்தடுத்து சொதப்புவது பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications