Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

15 ஓவரிலேயே மிரண்டு போன கோலி.. முகமெல்லாம் பதற்றம்.. ஆஸி.யின் ஸ்மார்ட் கேம்.. அப்படி என்ன நடந்தது?

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மார்ட் கேம் கேப்டன் கோலியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

முதலில் நிதானமாக ஆடிய ஆஸ்திரேலியா தற்போது அதிரடி காட்ட தொடங்கி உள்ளது. இந்திய பவுலர்கள் திணற தொடங்கி உள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்தனர். ஆனால் அதன்பின்தான் உண்மையில் அதிரடி காட்ட தொடங்கினார்கள். சைனி ஓவர் போட தொடங்கிய பின் ஆஸ்திரேலியா வீரர்கள் வார்னர், பின்ச் இருவரும் அடித்து வெளுக்க தொடங்கினார்கள்.

ஸ்மார்ட் கேம்

ஸ்மார்ட் கேம்

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்மார்ட் கேம் விளையாடியது என்றுதான் கூற வேண்டும். வார்னர், பின்ச் இருவரும் பும்ரா, ஷமி பந்துகளில் பெரிய அளவில் அடிக்கவில்லை. இவர்கள் பந்துகளில் அடித்தால் தானே விக்கெட் விழும் என்று இருவரும் இவர்கள் பந்தை அடிக்காமல் கவனமாக ஆடினார்கள்.

எப்படி ஆட்டம்

எப்படி ஆட்டம்

ஆனால் இன்னொரு பக்கம் சைனி, சாஹல், ஜடேஜா ஓவர்களில் அடித்து துவம்சம் செய்தனர். யாருடைய ஓவர்களில் அடிக்க வேண்டுமோ அவர்களின் ஓவர்களை மட்டும் கைவைத்துவிட்டு, மற்ற ஓவர்களில் கவனமாக ஆடினார்கள். இந்த ஸ்மார்ட் ஆட்டம் காரணமாக இந்திய பவுலர்கள் இந்த முறையும் திணறினார்கள்.

மோசமான பவுலிங்

மோசமான பவுலிங்

15 ஓவர்களுக்கு பின் கோலியே கொஞ்சம் மிரண்டு போய்விட்டார். அதிலும் முதல் 20 ஓவரில் ஒரு விக்கெட் கூட விழவில்லை. சைனி ஓவர் போட்ட போதெல்லாம் ஆஸ்திரேலிய பவுலர்கள் அதை அடித்து காலி செய்தனர். கடந்த போட்டியிலும் இதேபோல்தான் நடந்தது. இதனால் கோலி தனது முகத்தில் வெளிப்படையாக டென்ஷனை காட்ட தொடங்கினார்.

நடக்கவில்லை

நடக்கவில்லை

முகமெல்லாம் பதற்றத்தோடு இங்கும் அங்கும் சென்றார். சில சமயங்களில் மட்டுமே சிரித்தார். கோலிக்கு உதவியாக இருக்க ரோஹித், தோனி போன்ற முக்கிய வீரர்கள் இல்லை. இதுவும் கூட இந்திய அணியின் சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, November 29, 2020, 10:57 [IST]
Other articles published on Nov 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+