Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த நேரத்தில்தான்.. "அவரை" ரொம்ப மிஸ் செய்கிறது இந்தியா .. களத்தில் வெலவெலத்து போன கோலி.. பின்னணி!

சிட்னி: இந்திய அணியில் மூத்த வீரர்கள் சிலர் இல்லாமல் கோலி கடுமையாக திணறி வருகிறார். முக்கியமாக கேப்டன்சியில் கோலிக்கு சரியான அறிவுரை சொல்ல ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் தொடக்கத்தில் இருந்து இந்தியா மோசமாக திணறி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.

தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பெரிய அளவில் இந்திய அணியின் பவுலிங் எடுபடவில்லை.

எடுபடவில்லை

எடுபடவில்லை

முக்கியமாக இந்திய அணியில் மூத்த வீரர்கள் சிலர் இல்லாமல் கோலி கடுமையாக திணறி வருகிறார். கேப்டன்சியில் கோலிக்கு சரியான அறிவுரை சொல்ல, வழிகாட்ட ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ரோஹித்,தோனி இருந்த போது அவர்கள் இருவரும் கோலிக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். ஆனால் அது தற்போது மிஸ்ஸாகிறது.

கோலி

கோலி

இன்னொரு பக்கம் கீப்பராக இருந்து கொண்டு கோலி கொடுக்கும் அறிவுரைகளை இந்திய அணி மிஸ் செய்ய தொடங்கி உள்ளது. இப்படி போடு, அப்படி போடு என்று பவுலர்களுக்கு தோனி அறிவுரை வழங்குவார். ஆனால் இப்போதெல்லாம் பவுலர்களுக்கு தோனி போல அறிவுரை வழங்க ஆட்கள் இல்லை.

ராகுல்

ராகுல்

கீப்பிங் செய்யும் ராகுல் பெரிய அளவில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இது போக இன்று சாஹல் போட்ட 15வது ஓவரில் முக்கியமான ரன் அவுட் ஒன்றை ராகுல் மிஸ் செய்தார். தோனி இருந்திருந்தால் அந்த ரன் அவுட்டை எளிதாக எடுத்து இருப்பார். இந்த இடத்தில் தோனியை இந்திய அணி அதிகம் மிஸ் செய்தது.

ரோஹித்

ரோஹித்

இந்திய அணியில் தோனி மட்டுமின்றி ரோஹித்தும் தற்போது இல்லை. இதனால் கோலி தனித்து விடப்பட்டுள்ளார். இந்திய அணியின் மோசமான சொதப்பலுக்கு இது முக்கிய காராணமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, November 29, 2020, 12:21 [IST]
Other articles published on Nov 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+