Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. வந்தவுடன் வெளியே சென்ற வீரர்கள்.. என்ன நடக்குது இந்திய அணியில்? - பின்னணி

சிட்னி: இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் கடந்த இரண்டு போட்டிகள் போல இந்த போட்டியிலும் மோசமாகவே இருந்தது. நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தும் அடுத்தடுத்து வீரர்கள் அவுட்டாகி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கும் இந்திய அணி அங்கு மிக மோசமாக திணறி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இதனால் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என்று இழந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி திணறி வருகிறது.

பேட்டிங்

பேட்டிங்

கடந்த இரண்டு போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பியது போல இன்றைய போட்டியிலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பி உள்ளது. இன்று இந்திய அணி வித்தியாசமான ஓப்பனிங் இணையுடன் ஆடியது. தவான் - சுப்மான் கில் இருவரும் இன்று ஓப்பனிங் இறங்கினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் தொடக்கத்தில் இருந்து திணறினார்கள்.

திணறல்

திணறல்

இன்று பேட்டிங் இறங்கிய இரண்டு பேருமே தொடக்கத்தில் பந்துகளை குடித்ததோடு அதிரடி ஷாட்களை அடிக்க முடியாமல் திணறினார்கள். அதிலும் தவான் இன்று பந்தை தொட கூட முடியாமல் கஷ்டப்பட்டார். இன்னொரு பக்கம் சுப்மான் கொஞ்சம் அதிரடியாக அடித்தாலும் தேவையில்லாத ஷாட்களை தேர்வு செய்து அவசரப்பட்டார்.

அவுட் ஆனார்கள்

அவுட் ஆனார்கள்

இதனால் போட்டியின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை இழந்து இந்தியா திணறியது. தவான் 16 ரன்களுக்கும், சுப்மான் கில் 33 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள். 16 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டை இழந்தது. அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. 2 போட்டியில் சொதப்பியது போல இந்த போட்டியிலும் சொதப்பினார்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

வெறும் 19 ரன்கள் எடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டானார். அதன்பின் வந்த கே. எல் ராகுல் மீது அதிக அழுத்தம் இருந்தது. கடந்த போட்டியிலும் இவர் நன்றாக ஆடிய நிலையில் இன்றைய போட்டியில் அவர் மீது அதிகம் நம்பிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியில் அவர் சரியாக ஆடவில்லை. தொடக்கத்தில் இருந்து திணறினார்.

அவுட்

அவுட்

11 பந்துகள் பிடித்த ராகுல் வெறும் 5 ரன்கள் எடுத்து அவுட்டானர். இன்று களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் கொஞ்சம் கூட ஆர்வமே இன்றி, ஒரு துடிப்பின்றி ஆடினார்கள். பேட்டிங் பிட்ச் என்றாலும் கூட இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. தொடரை இழந்துவிட்ட வருத்தத்தில் இந்திய அணி ஆடியது போல இன்றைய பேட்டிங் இருந்தது.

ஐபிஎல்

ஐபிஎல்

கோலியும் கூட இன்று 63 ரன்கள் எடுத்து அவுட்டாகி, சதம் அடிக்க தவறினார். அதேபோல் பெரும்பாலான இந்திய வீரர்கள் இன்னும் ஐபிஎல் பீவரில் இருந்தே வெளியே வரவில்லை. கேப்டன்சி தொடங்கி எல்லாம் ஐபிஎல் போலவே இருக்கிறது. பவுலிங் ரொட்டேஷன், பேட்டிங் ஆர்டர் கூட ஐபிஎல் போலவே உள்ளது. இந்திய அணி இன்னும் ஒருநாள் தொடருக்கான மோடிற்கு வரவில்லை. விரைவில் இந்திய அணி ஒருநாள் ஸ்டைல் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு மாற வேண்டும்... அப்போதுதான் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியும்.

Story first published: Wednesday, December 2, 2020, 12:06 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+