Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு கஷ்டப்பட்டார்.. கோலியின் போராட்டம் வீண்.. இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா திரில் வெற்றி!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 20 ஓவர் முடிவில் 144/4 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை வீழ்த்தி ஆஸி. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

மூன்று டி 20 போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 1-2 என்று பறிகொடுத்தது.

 எப்படி

எப்படி

அதை தொடர்ந்து நடந்த டி 20 தொடரில் இந்திய அணி அதிரடியாக ஆடி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று டி 20 தொடரை கைப்பற்றியது.இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று நடந்தது.

வெற்றி

வெற்றி

இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று மொத்தமாக தொடரை வசப்படுத்தும் எண்ணத்துடன் இந்தியா களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இன்று விளையாடும் இந்திய அணியில் தவான், ராகுல், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், பாண்டியா, நடராஜன், ஷரத்துல் தாக்கூர், சாகர் சஹால், வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் மீண்டும் வந்துள்ளார். மீண்டும் அவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பார். கடந்த போட்டியில் காயம் காரணமாக பின்ச் ஆடவில்லை. கடந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கிய மேத்யூ வேட் இன்றும் இறங்க உள்ளார். ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் மீண்டும் வந்துள்ளார். மீண்டும் அவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பார். கடந்த போட்டியில் காயம் காரணமாக பின்ச் ஆடவில்லை. கடந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கிய மேத்யூ வேட் இன்றும் இறங்க உள்ளார்.

ரிஸ்க்

ரிஸ்க்

இன்று நடக்கும் போட்டியிலும் இந்திய அணியில் பும்ரா ஆடவில்லை. கடந்த போட்டியில் இந்திய அணியில் நடராஜன் தவிர வேறு யாரும் சரியாக பவுலிங் செய்யவில்லை. ஆனாலும் இன்று பும்ரா, சமி இரண்டு பேரும் இடம்பெறவில்லை. இதன் மூலம் இந்தியா பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது.

எத்தனை

எத்தனை

இன்று போட்டியில் இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 187 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட்டிற்கு 186ரன்கள் எடுத்தது. இன்று இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. இரண்டு கேட்ச்களை இந்திய பீல்டர்கள் தவறவிட்டனர்.

மோசம்

மோசம்

அதேபோல் நடராஜன் ஓவரில் விழ வேண்டிய விக்கெட், கோலி தாமதமாக ரிவ்யூ கேட்டதால் மிஸ்ஸானது. பல இடங்களில் இந்திய வீரர்கள் மிஸ் பீல்ட் செய்தனர். சாஹல் ஓவரில் விக்கெட் ஒன்று நோ பால் ஆனது. இப்படி பல விஷயங்கள் இன்று இந்திய அணிக்கு எதிராக சென்றது. இதன் காரணமாக இன்று மேக்ஸ்வெல் மேத்யூவேட் 80, மேக்ஸ்வெல் 54 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டிற்கு 186 ரன்கள் எடுத்தது.

செம

செம

இதற்கு பின் களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் வீரர் ராகுல் டக் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய கோலி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். அதிலும் கடைசி கட்டத்தில் இவர் சிக்ஸ் பவுண்டரி என்று அதிரடி காட்டினார். இந்திய அணியின் வெற்றிக்காக தீவிரமாக போராடியவர், கடைசி கட்டத்தில் மொத்தம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கோலி 61 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.

கோலி எப்படி

கோலி எப்படி

அதன்பின் கடைசி கட்டத்தில் ஷர்துல் தாக்கூர் 7 பந்தில் 17 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். ஆனாலும் இந்திய அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்றது. இந்தியா 20 ஓவர் முடிவில் 144/4 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை வீழ்த்தி ஆஸி. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Tuesday, December 8, 2020, 17:54 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+