For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

11 ரன்னுக்கு 4 விக்கெட்.. என்ன இதெல்லாம்? ஏமாற்றிய வீரர்கள்.. கடுப்பான கேப்டன் கோலி!

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் இந்திய அணி ஏமாற்றம் அளித்தது.

கடைசி 11 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது இந்தியா. பின்வரிசை வீரர்கள் 50 ரன்களாவது சேர்ப்பார்கள் என எதிர்பார்த்த கேப்டன் கோலி கடும் ஏமாற்றம் அடைந்தார்.

அஸ்வின் உட்பட கடைசி ஐந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். இரண்டாம் நாளின் துவக்கத்தில் வரிசையாக வீழ்ந்தனர்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி படு நிதானமாக பேட்டிங் செய்தது. முதல் நாளின் முடிவில் 233 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து இருந்தது.

இந்தியா நிலை

இந்தியா நிலை

முதல் நாள் ஆட்டத்தில் கோலி 74, புஜாரா 42, ரஹானே 42 ரன்கள் எடுத்தனர். நாளின் முடிவில் அஸ்வின், சாஹா பேட்டிங் செய்து வந்தனர். அவர்கள் அணியை 250 ரன்களை கடந்து 300 ரன்கள் வரை அழைத்துச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அஸ்வின், சாஹா அவுட்

அஸ்வின், சாஹா அவுட்

இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய உடன் மூன்றாவது பந்தில் அஸ்வின் 15 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சாஹா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின் உமேஷ் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ் சில டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி உள்ளார். அதனால் அவர் சில பவுண்டரிகளை அடிப்பார் என எதிர்பார்த்தது இந்திய அணி நிர்வாகம். ஆனால், அவர் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷமி டக் அவுட் ஆனார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

233 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து இருந்த இந்திய அணி, 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 11 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து ஏமாற்றம் அளித்தது. 250 ரன்களை கடக்கக் கூட உதவாத பின்வரிசை வீரர்களை கண்டு கோலி பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

Story first published: Friday, December 18, 2020, 11:34 [IST]
Other articles published on Dec 18, 2020
English summary
Aus vs Ind : Indian tail enders failed to score
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+