Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடியவே முடியாது.. விடாப்பிடியாக சொல்லிய ஆஸி. அணி.. எப்படிப்பட்ட வீரர் அவர்.. அவருக்கு இந்த நிலையா?

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக மேத்யூ வேட் களமிறங்கி உள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி 20 போட்டி தற்போது நடந்து வருகிறது. முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி நடந்து வருகிறது.

இன்று நடக்கும் போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியா டி 20 தொடரில் வென்றுவிடும் என்பதால் இன்று நடக்கும் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இன்று நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான வீரர்கள் பலர் இடம்பெறவில்லை.காயம காரணமாக முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச், வார்னர், ஹஸல்வுட், மிட்சல் ஸ்டார்க், கும்மின்ஸ் என்று முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை.

அணியில் இல்லை

அணியில் இல்லை

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இதையடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.பின்ச் இல்லாத காரணத்தால் கீப்பர் வேட் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஆஸ்திரேலிய அணியில் இன்று ஸ்மித் இடம்பெற்றுள்ளார். ஆனாலும் அவர் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. என்ன நடந்தாலும் அவரை மீண்டும் கேப்டனாக போட கூடாது என்பதில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. பின்ச் போன்ற முக்கியமான வீரர்கள் அணியில் இல்லை என்றாலும் கூட கண்டிப்பாக ஸ்மித்தை கேப்டனாக போட கூடாது என்பது ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் உறுதியாக உள்ளது.

மோசம்

மோசம்

கிரிக்கெட் பந்தில் உப்புத்தாள் தேய்த்து தடை பெற்றவர் ஸ்மித். இவருக்கு கேப்டனாக நீடிக்கவும் தடை இருந்தது. இந்த நிலையில் இவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நீடிக்க கூடாது என்பதில் அணி நிர்வாகம் உறுதியாக உள்ளது. மோசடி செய்து தடை வாங்கியவரை கேப்டனாக நியமிக்க கூடாது.

முடியாது

முடியாது

ஸ்மித் மிகவும் சிறப்பான வீரர் ஆனால் அணியை வழி நடத்தும் தகுதி ஸ்மித்திற்கு இல்லை . அவர் எவ்வளவு முக்கியமான வீரராக இருந்தாலும் கேப்டனாக போட முடியாது என்பதில் அணி நிர்வாகம் உறுதியாக உள்ளது. இதனால்தான் இன்று ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் இல்லை என்ற நிலையிலும் கூட ஸ்மித்திற்கு பதிலாக மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Story first published: Sunday, December 6, 2020, 14:25 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+