For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நின்னு ஆடு ஜட்டு".. தோனி சொன்னபடியே செய்த ஜடேஜா.. எவ்வளவு பெரிய மாற்றம் பாருங்க.. சிறப்பான சம்பவம்!

சிட்னி: இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் தோனி சொன்னபடியே இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி 20 போட்டியில் இந்திய அணி ஆடி வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி தற்போது நடந்து வருகிறது.

இதில் தொடக்கத்தில் இந்திய அணி மோசமாக சொதப்பினாலும் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியது. இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 161 ரன்கள் எடுத்துள்ளது.

எப்படி

எப்படி

இந்த போட்டியிலும் ஜடேஜாவின் அதிரடிதான் இந்திய அணியை காப்பாற்றியது. தனது வாழ்நாளின் மிக சிறந்த பார்மில் ஜடேஜா இருக்கிறார். தன்னை மிக சிறப்பான பேட்ஸ்மேன் என்று ஜடேஜா ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகிறார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய தொடரில் மூத்த வீரர்கள் எல்லோரும் சொதப்பிய நிலையில் ஜடேஜா - பாண்டிய ஜோடி மட்டுமே சிறப்பாக ஆடி வருகிறது. இன்று பாண்டியாவும் அவசரப்பட்டு அவுட்டான நிலையில் ஜடேஜா தொடர்ந்து களத்தில் நின்று இந்திய பேட்டிங்கை சிறப்பாக பினிஷ் செய்தார்.

 தொடக்கம்

தொடக்கம்

தொடக்கத்தில் மெதுவாக ஆடிய ஜடேஜா கடைசி கட்டத்தில் வெளுத்தெடுத்தார். கடைசி 10 பந்துகளில் மட்டும் ஜடேஜா 4 0 2 2 6 4 4 4 4 0 என்று அதிரடி காட்டினார். கடைசி 10 பந்தில் மட்டும் 30 ரன்களை இவர் எடுத்தார். மொத்தம் 25 பந்தில் ஜடேஜா 44 ரன்களை எடுத்தார். இதன் மூலம்தான் இந்தியா கொஞ்சம் டீசண்ட் ஸ்கோர் எடுத்தது.

இந்த தொடர்

இந்த தொடர்

இந்த தொடர் முழுக்க ஜடேஜா அதிரடியாக ஆடி உள்ளார். இதற்கு முன் ஐபிஎல் தொடரிலும் ஜடேஜா அதிரடியாக ஆடினார். இந்த நிலையில் தனது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு தோனிதான் காரணம் என்று ஜடேஜா குறிப்பிட்டுள்ளார். எனக்கு தோனி நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறார். சென்னை மற்றும் இந்திய அணி இரண்டிலும் தோனி எனக்கு நிறைய விஷயங்களை பாடமாக எடுத்து உள்ளார்.

கடைசி நேரம்

கடைசி நேரம்

முக்கியமாக கடைசி நேரம் வரை ஏன் களத்தில் நிற்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்துள்ளார். தோனிதான் என்னை இப்படி ஆட சொன்னது. கடைசி ஓவர் வரை நின்றால் கூடுதல் ரன் எடுக்கலாம் என்று கூறி இருக்கிறார். அவர் சொன்னது அப்படியே நடந்தது. அவருடன் பல முறை ஆடி இருக்கிறேன்.

அனுபவம்

அனுபவம்

அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இது. ஆஸ்திரேலிய தொடரில் எனக்கு இந்த அனுபவம் பெரிய அளவில் உதவியது என்று ஜடேஜா குறிப்பிட்டுள்ளார். தோனி கொடுத்த அறிவுரையால் இவரின் பேட்டிங் பெரிய அளவில் மாறியுள்ளது. தோனி சொன்னபடியே இன்றும் ஆடிய ஜடேஜா மிகவும் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார்.

Story first published: Friday, December 4, 2020, 16:06 [IST]
Other articles published on Dec 4, 2020
English summary
AUS vs IND: Jadeja proved himself once again against Australia in T20 with Dhoni tips.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+