Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரப்போவது யார் என்றே தெரியவில்லை.. பாதியில் வெளியேறிய ஜடேஜா.. இந்திய அணிக்குள் இப்படி ஒரு குழப்பமா?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடக்க உள்ள இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பதில் ஆட போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே இன்று இரண்டாவது டி 20 போட்டி நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

இதனால் இன்று டி 20 தொடரை கைப்பற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது. முதல் டி 20 போட்டியில் இந்தியா ஏற்கனவே வென்றுவிட்டது.

 காரணம்

காரணம்

முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு ஜடேஜா முக்கியமான காரணமாக இருந்தார். இந்திய அணியில் கே. எல் ராகுல் மட்டுமே அன்று அரைசதம் அடித்தார். அன்று மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோரும் மோசமாக சொதப்பினார்கள். கடைசியாக இறங்கிய ஜடேஜா இந்திய அணியை காப்பாற்றினார்.

காப்பாற்றினார்

காப்பாற்றினார்

அதிரடியாக கடைசி கட்டத்தில் ஆடி 44 ரன்கள் எடுத்தார். இவரின் அதிரடியால் 161 ரன்களை இந்திய அணி எடுத்தது. இந்த போட்டியின் போதே இவருக்கு தொடையிலும், தலையிலும் காயம் ஏற்பட்டது. இவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக லேசான மயக்கமே வந்தது. இதனால் மீதம் இருந்த போட்டியில் இவருக்கு சாஹல் மாற்று வீரராக இறங்கினார்.

ஜடேஜா

ஜடேஜா

இந்த காயம் காரணமாக ஜடேஜாவிற்கு உடனே ஸ்கேன் எடுக்கப்பட்டது. இரண்டு முறை அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதேபோல் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பிலும் வைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அவர் டி 20 தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நீக்கம்

நீக்கம்

டி 20 தொடரில் மீதம் இருக்கும் 2 போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இன்று நடக்கும் போட்டியில் இதனால் அவருக்கு மாற்று வீர்ர் யார் இறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. மாற்று வீரராக பேட்ஸ்மேன் யாராவது இறங்குவாரா, அல்லது ஸ்பின் பவுலர்கள் யாராவது இறங்குவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

சாஹல்

சாஹல்

பெரும்பாலும் இன்று ஜடேஜாவிற்கு பதிலாக சாஹல் களமிறங்க வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் ஜடேஜாவிற்கு மாற்று வீரராக களமிறங்கி சாஹல் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் இன்று கூடுதல் பவுலர்களோடு இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

குழப்பம்

குழப்பம்

இந்திய அணியில் ஜடேஜாதான் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் நன்றாக ஆடினார். இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பும் போதெல்லாம் ஜடேஜாதான் இந்திய அணியை காப்பாற்றினார். தற்போது அவருக்கு மாற்றாக இறங்க போகும் வீரர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, December 6, 2020, 9:48 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+