Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாத்துக்கும் ஓடி வந்து கத்தினால் எப்படி?.. சக வீரர்களையே இரிடேட் செய்த ராகுல்.. என்னதான் நடந்தது?

சிட்னி: இந்திய அணியின் இளம் வீரர் கே. எல் ராகுல் இன்று களத்தில் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் தற்போது சிட்னியில் நடந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் அதிரடி காட்டி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் ஒரு விக்கெட்டை எடுப்பதற்குள் இந்திய அணி படாத பாடு பட்டுவிட்டது. அதிலும் இந்திய பவுலர்கள் இன்று பந்தை ஸ்விங் செய்ய முடியாமல் கடுமையாக திணறினார்கள்.

திணறல்

திணறல்

இந்த நிலையில்தான் இந்திய அணியின் இளம் வீரர் கே. எல் ராகுல் இன்று களத்தில் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது கே. எல் ராகுல் கீப்பராக இருக்கிறார். அதேபோல் இவர் துணை கேப்டனாகவும் இருக்கிறார்.

கீப்பிங்

கீப்பிங்

கீப்பிங் செய்து வரும் இவர் இன்று மோசமாக திணறினார். கேட்ச் எல்லாம் நன்றாக பிடித்தார். வேகமாகத்தான் செயல்பட்டார். ஆனால் இவர் ஸ்டம்பிற்கு பின் இருந்து கொண்டு பவுலர்களை மோசமாக வழி நடத்தினார். தோனி இருக்கும் போது அவர் சிறப்பாக டிப்ஸ் கொடுப்பார். விக்கெட் விழாத நேரத்தில் தோனி சொல்வது போல பவுலிங் செய்தால்.. எளிதாக விக்கெட் விழும்.

ஆனால்

ஆனால்

ஆனால் தற்போது கீப்பர் கே. எல் ராகுல் சொல்லும் எதுவும் களத்தில் பவுலர்களுக்கு உதவியாக இல்லை. ராகுல் சொல்வதற்கு அப்படியே எதிர்பதமாகவே களத்தில் எல்லாம் நடக்கிறது. அவர் சொல்வது போல பவுலிங் செய்யும் போதெல்லாம் வார்னர், பின்ச் இருவரும் பவுண்டரி, சிக்ஸ் என்று அடித்தனர்.

மோசம் பாஸ்

மோசம் பாஸ்

அதிலும் இவர் ஸ்டம்பிற்கு பின் இருந்து கொண்டு அடிக்கடி விக்கெட் விக்கெட் என்று கத்தினார். விக்கெட் இல்லாத நேரங்களில் கூட விக்கெட் விழுந்ததாக உற்சாகம் அடைந்து ராகுல் கத்தினார். ஒரு முறை ராகுல் இப்படி கத்தினால் பிரச்சனை இல்லை. கிட்டத்தட்ட நான்கு முறை ராகுல் இப்படி அடிக்கடி விக்கெட் விக்கெட் என்று கத்தினார்.

குழப்பம்

குழப்பம்

தேவையில்லாமல் தானும் குழம்பி பவுலர்களையும் குழப்பினார். இவரால் கொஞ்சம் கோலியும் ரிவ்யூ கேட்பதில் தடுமாறி போனார். இவர் அடிக்கடி இப்படி கத்தியது இந்திய, ஆஸ்திரேலிய வீரர்களை கொஞ்சம் இரிட்டேட் செய்தது.

அட போங்க

அட போங்க

தோனி இருந்தால் இப்படி அடிக்கடி விக்கெட் கேட்க மாட்டார். பவுலர்கள் விக்கெட் கேட்கும் போது கூட.. விக்கெட் இல்லை பாஸ், அமைதியாக இருங்கள் என்று தோனி சமாதானம் செய்வார். ஆனால் ராகுலிடம் அந்த சமயோஜித புத்தி கொஞ்சம் குறைவாக இருக்கிறது.

Story first published: Friday, November 27, 2020, 16:09 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+