Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டிக்கு முன் பறந்த "கான்பிரன்ஸ் கால்".. ரோஹித்திடம் கோலி சொன்ன அந்த வார்த்தை.. ஆடிப்போன பிசிசிஐ!

டெல்லி: இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையிலான மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக நேற்று போட்டிக்கு முன்பாக இவர்கள் இருவருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடரை இழந்து உள்ளது.

இன்னும் ஒரு ஒருநாள் போட்டி மட்டுமே உள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா இல்லாததும் கூட அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தோல்வி

தோல்வி

இந்திய அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஆனால் இவரை ஒருநாள் அணியில் இருந்து புறக்கணிக்க காயம்தான் உண்மையான காரணமா ? அல்லது வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி எழுந்தது. கோலிதான் அரசியல் செய்து ரோஹித் சர்மாவை புறக்கணித்தார் என்றும் கூட புகார்கள் வைக்கப்பட்டது.

நிலை என்ன

நிலை என்ன

இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டிக்கு பின் கோலி பேட்டி அளித்த போது அவரிடம் ரோஹித் சர்மா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கோலி, அணி தேர்வுக்கு முன்பு, ரோஹித் சர்மாவிற்கு காயம் இருப்பதாக செய்திகள் வந்தது. அவருக்கு ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டது.

எப்படி

எப்படி

இதனால் அவரால் விளையாட முடியாது. அவர் தொடருக்கு தேர்வாக மாட்டார் என்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு பின் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடினார். இதனால் எங்களுடன் அவர் ஆஸ்திரேலியா வருவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. இது தொடர்பாக எந்த தகவலும் எங்களிடம் முழுதாக இல்லை. நாங்கள் தற்போது தெளிவான விளக்கத்திற்காக காத்து இருக்கிறோம், என்று கூறி இருந்தார்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மாதான் தெளிவாக எதுவும் சொல்வது இல்லை.அவர் மீதுதான் தவறு என்று கூறும் வகையில் கோலி இப்படி பேசி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிசிசிஐ இருவருக்கும் இடையில் சமாதானம் செய்ய முடிவு செய்தது.நேற்று போட்டிக்கு முன்பாக இவர்கள் இருவருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.

போன் கால்

போன் கால்

இருவருக்கும் இடையே நேற்று வீடியோ கால் செய்யப்பட்டுள்ளது. கோலி இதில் ரோஹித் சர்மாவிடம் நேரடியாக பேசி இருக்கிறார்,. ரவி சாஸ்திரி உடன் இருந்துள்ளார். ரோஹித் சர்மாவின் காயத்தின் நிலை, மனஸ்தாபம், குழப்பங்கள் குறித்து இவர்கள் பேசி இருக்கிறார்கள். என்னதான் பிரச்சனை என்பது குறித்து பேசி உள்ளனர்.

தொடர் எப்படி

தொடர் எப்படி

ரோஹித்தை சீக்கிரம் அணியில் இணையும் படி கோலி குறிப்பிட்டார் என்றும், இந்த போன் கால் 45 நிமிடம் நீடித்தது என்றும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய தொடர் குறித்து இதில் பேசப்பட்டது என்று கூறப்படுகிறது.

Story first published: Monday, November 30, 2020, 10:17 [IST]
Other articles published on Nov 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+