இதை கேப்டன்சி என்றே சொல்ல மாட்டேன்.. என்ன கோலியை பார்த்து கம்பீர் இப்படி சொல்லிட்டாரே.. அடக்கடவுளே!
டெல்லி: இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைய கேப்டன் கோலியின் மோசமான கேப்டன்சிதான் காரணம் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்துள்ளது. அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று இந்தியா இழந்துள்ளது.
இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு கேப்டன் கோலிதான் முழு முதற் காரணம் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

கேப்டன்சி
கோலியின் கேப்டன்சி மிக மோசமாக இருந்தது.கே. எல் ராகுல் பார்மிற்கு திரும்பி உள்ளார். பும்ரா இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. கோலியின் கேப்டன்சியில் நேர்மை இருப்பது போல தெரியவில்லை. அணியின் முக்கியமான பவுலர்களுக்கு தொடக்கத்தில் ஓவர் கொடுக்க வேண்டும். ஆனால் அதை கோலி செய்யவில்லை.

ஷமி
முதல் பவர்பிளேவில் ஷமி, பும்ராவிற்கு வெறும் 2-3 ஓவர்களை முதல் பவர்பிளேவில் கோலி கொடுக்கிறார். இது வேலைக்கு ஆகாது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். பும்ரா அல்லது ஷமிக்கு முதல் 10 ஓவரில் நான்கு ஓவராவது கொடுத்து இருக்க வேண்டும்.

கோலி செய்யவில்லை
ஆனால் அதை கோலி செய்யவில்லை. இது என்ன மாதிரியான கேப்டன்சி என்று புரியவில்லை. இது கேப்டன்சி என்றே நான் கூற மாட்டேன். இது டி 20 கிரிக்கெட் கிடையாது. கோலி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரியவே இல்லை. இந்திய அணியின் தேர்விலும் தவறு இருக்கிறது.

கூடுதல் பவுலர்
இந்திய அணியில் கூடுதலாக ஒரு பவுலர் இருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்ய முடியாத நிலையில் கூடுதலாக ஒரு பவுலர் இருக்க வேண்டும். வாஷிங்க்டன் சுந்தர், துபே போன்ற வீரர்களை அணியில் எடுத்து இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் பேட்டிங், பவுலிங் எல்லாம் சிறப்பாக அமைந்து இருக்கும். இந்திய அணியின் தேர்விலும் தவறு நடந்தது இதன் மூலம் தெளிவாகிறது, என்று கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications