Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித்.. ரோஹித்.. ஓங்கி ஒலிக்கும் குரல்.. கோலியின் கேப்டன்சிக்கே பெரிய சிக்கல்.. இன்று நடந்த சம்பவம்

ரோஹித்.. ரோஹித்.. ஓங்கி ஒலிக்கும் குரல்.. கோலியின் கேப்டன்சிக்கே பெரிய சிக்கல்.. இன்று நடந்த சம்பவம்

சிட்னி: அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் கேப்டன்சியில் சொதப்பியதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் கோலி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது.

இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 390 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 389/4 ரன்கள் எடுத்துள்ளது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்சி மிகவும் மோசமாக இருந்தது. பவுலிங் ரொட்டேஷன், அணி தேர்வு, பீல்டிங் செட்டப், பவுலர்களுக்கு அறிவுரை வழங்குவது என்று கேப்டன் கோலியின் செயல்பாடு எதுவும் சரியில்லை. அதிலும் இன்று நிறைய தவறான முடிவுகளை அவர் எடுத்தார்.

பாண்டியா

பாண்டியா

பாண்டியாவிற்கு ஓவர் கொடுப்பதாக இருந்தால் கோலி முன்பே கொடுத்து இருக்க வேண்டும். அதேபோல் ஷமியை கொஞ்சம் இடையில் அதிகமாக பயன்படுத்தி இருக்க வேண்டும். இதெல்லாம் போக பும்ராவிற்கு ஏற்றபடி பீல்டிங் செட் செய்யவில்லை. அவருக்கு போதிய ஆலோசனையையும் கோலி வழங்கவில்லை.

ஆலோசனை

ஆலோசனை

போன ஓவரில் மோசமாக பவுலிங் செய்த சைனிக்கு இந்த மேட்சிலும் கோலி வாய்ப்பு கொடுத்து மோசமாக சொதப்பி விட்டார். இந்த போட்டியிலும் மிக மோசமாக பவுலிங் செய்த சைனி வெறும் 7 ஓவரில் 70 ரன்கள் கொடுத்தார். இப்படி இந்த போட்டி முழுக்க கோலி எடுத்த முடிவுகள் எல்லாம் தவறாகவே இருந்தது.

விமர்சனம்

விமர்சனம்

இதனால் கோலியின் கேப்டன்சி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரோஹித், தோனி இருந்த காரணத்தால் கோலி கேப்டன்சி நன்றாக இருந்தது. அவர்கள் இல்லாமல் கோலி மோசமாக திணறுகிறார். கோலியை கேப்டன்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

ரோஹித்

ரோஹித்

ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக இணையத்தில் பலரும் இதற்காக கோரிக்கை வைத்து வருகிறார்கள். கோலியை தூக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக போட வேண்டும். அப்போதுதான் கோலியும் பேட்ஸ்மேனாக நன்றாக ஆடுவார்.

எதிர்காலம்

எதிர்காலம்

அதேபோல் அணியின் எதிர்காலத்திற்கும் நன்றாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். பிசிசிஐ அமைப்பும் இது தொடர்பாக பல நாட்களாக ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இணையம் முழுக்க பலரும் ரோஹித்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

Story first published: Sunday, November 29, 2020, 14:33 [IST]
Other articles published on Nov 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+