
முடிவுகள்
இந்த ஆஸ்திரேலிய தொடரில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாமல் கேப்டன் கோலி திணறி வருகிறார். யாரை ஓவர் அனுப்புவது, பவர் பிளேவில் யாரை களமிறக்குவது. யாருக்கு எப்போது பேட்டிங் கொடுப்பது, பீல்டர்களை எங்கே நிற்க வைப்பது என்று தெரியாமல் கேப்டன் கோலி கடுமையாக குழம்பி வருகிறார்.

திணறல்
தோனி இருந்த தொடக்க காலத்தில், அவர்தான் கோலிக்கு ஆலோசனைகளை வழங்குவார். அதன்பின் ரோஹித் வளர வளர அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது துணை கேப்டன் ரோஹித் கோலிக்கு ஆலோசனைகளை வழங்குவார். இதனால் கோலி தவறு செய்யும் போது அந்த தவறுகள் ரோஹித் கொடுக்கும் ஐடியா மூலம் சரி செய்யப்படும்.

ஆனால் இப்போது
ஆனால் இப்போது ரோஹித், தோனி இருவரும் இந்திய அணியில் இல்லை. இதனால் இறக்கை இல்லாத பறவை போல கோலி திணறி வருகிறார். கோலி திறமையான கேப்டன்தான். ஆனால் டீமில் இருக்கும் மற்ற யாருக்கும் அனுபவம் இல்லை. கோலிக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு துணை கேப்டன் ராகுலுக்கு அனுபவம் போதவில்லை. இதனால் கோலி சரியான வழிகாட்டுதல் இன்றி திணறுகிறார்.

எப்படி
ரோஹித் இல்லாமல் ஆர்சிபி அணி போல இந்திய அணி மாறிவிட்டது. ஒரு அணி என்பது கூட்டு முயற்சி. அது கேப்டன் மட்டுமில்லை. ஆஸ்திரேலிய அணியில் வார்னர், பின்ச், ஸ்மித், மேக்ஸ்வெல் என்று அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் அந்த அணி மிகவும் வலிமையாக உள்ளது. ஆனால் இந்திய அணியில் கோலியே அனைத்தையும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.

ரோஹித்
கோலியின் இந்த மோசமான கேப்டன்சியை பலரும் இணையத்தில் கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர். அவரிடம் பெரிய அளவில் கேப்டன்சி நுணுக்கங்கள் இல்லை, இத்தனை நாட்கள் ரோஹித் உதவியோடு கோலி செயல்பட்டார்.

இல்லை
தற்போது ரோஹித் இல்லாமல் கஷ்டப்படுகிறார், என்று கிண்டல் செய்து வருகிறார்கள். இந்திய அணியில் ரோஹித் இல்லையென்றால் கோலியால் எளிதாக வெல்ல முடியாது என்பது கடந்த இரண்டு போட்டிகள் மூலம் உறுதியாகிவிட்டது. அவரின் டெக்னிக் எதுவும் பெரிய அளவில் ஈர்க்க கூடியதாக இல்லை.


Click it and Unblock the Notifications