ப்ளீஸ் கோலி.. போய் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.. களத்தில் நடந்த அந்த சம்பவம்.. ரொம்ப மோசம்!
சிட்னி: இந்திய அணியின் கேப்டன் கோலி இன்று களத்தில் நடந்த கொண்ட விதமும், கேப்டனாக எடுத்த சில முடிவுகளும் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தற்போது டி20 போட்டியில் தற்போது மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து ஆஸ்திரேலியா 150 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கேப்டன்
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி இன்று களத்தில் நடந்த கொண்ட விதமும், கேப்டனாக எடுத்த சில முடிவுகளும் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. முதல் விஷயம் இன்று சாஹலை அவர் அணியில் எடுக்கவில்லை. இதற்கு பதிலாக வாஷிங்க்டன் சுந்தரை அணியில் எடுத்தார். ஆனால் வாஷிங்க்டன் சுந்தர் பெரிய அளவில் விக்கெட் எடுக்கவில்லை.

ஜடேஜா
மாறாக இன்று ஜடேஜா தலையில் காயம் காரணமாக சஹால் அணிக்குள் வந்தார். அதோடு தலையில் காயம் என்பதால் ஜடேஜாவிற்கு பதில் சஹாலுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. இன்று அவர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இன்று கோலி யாரை அணியில் எடுக்கவில்லையோ அவர்தான் மாற்று வீரராக வந்து 3 விக்கெட் எடுத்தார்.

விக்கெட் இருக்காது
இன்று ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டு சாஹல் உள்ளே வரவில்லை என்றால் இத்தனை விக்கெட் விழுந்து இருக்காது. அப்படி என்றால் ஒரு கேப்டனாக இன்று கோலி சரியான அணியை தேர்வு செய்யவில்லை என்பது உறுதியாகிறது. ஒரு கேப்டனாக இன்று சாஹலை கோலி அணியிலேயே எடுக்கவில்லை.

பீல்டிங்
கோலியின் முடிவு எடுக்கும் திறன் இங்குதான் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதேபோல் கோலி இன்று பேட்டிங்கும் சரியாக செய்யவில்லை.மோசமாக பேட்டிங் செய்த கோலி வெறும் 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதேபோல் பீல்டிங்கில் இன்று மோசமாக சொதப்பினார். மிக எளிதாக ஆரோன் பின்ச் கொடுத்த கேட்சினை விட்டார்.

கேட்ச்
ஓவர் ரொட்டேஷன் கொடுப்பதற்கும் நீண்ட நேரம் எடுத்தார். இப்படி இன்று களத்தில் கோலி நிறைய முறை அதிர்ச்சி கொடுத்தார். கோலி ஏனோ தனது பேட்டிங் மட்டுமின்றி அனைத்து துறையிலும் பார்ம் அவுட் போலவே தெரிகிறது. அவர் சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு, பார்மிற்கு திரும்பி மீண்டும் பழைய கோலியாக வரவேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications