Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிக்கடி இப்படி பண்ணுனா என்ன அர்த்தம்.. கோலிக்கு எதிராக திரண்டு வந்த கூட்டம்.. என்ன நடந்தது? சர்ச்சை

சிட்னி: இந்திய அணியில் கேப்டன் கோலி அடிக்கடி மாற்றங்களை செய்வதை முன்னாள் இந்திய வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது.

அதன்பின் நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும் முதல் டி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனால் இன்று நடக்கும் டி 20 போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி மிகவும் உறுதியாக உள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்திய அணியில் கேப்டன் கோலி அடிக்கடி மாற்றங்களை செய்வதை முன்னாள் இந்திய வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இரண்டு போட்டிகளில் ஒரு வீரர் சரியாக ஆடவில்லை என்றால் கோலி உடனே அவர்களை அணியில் இருந்து நீக்கிவிடுகிறார். உடனே வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கிறார்.

தவறு

தவறு

ஒரு வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால் சாஹல் இரண்டு போட்டியில் சரியாக வீசவில்லை என்றதும் அவரை நீக்கிவிட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரில் சரியாக ஆடவில்லை என்றதும் அவரை டி 20 யில் உட்கார வைத்துவிட்டார். இதெல்லாம் போக மயங்க் அகர்வாலுக்கு போதிய வாய்ப்பு கொடுக்க மறுத்து வருகிறார்.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் வீரர்கள் சொதப்பும் போது அவர்களை சப்போர்ட் செய்யாமல் கோலி அணியில் இருந்தே நீக்கிவிடுகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கோலி அடிக்கடி மாற்றங்களை செய்வதை முன்னாள் இந்திய வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள முன்னால வீரர் முகமது கைப்.. கோலி இப்படி இந்திய அணியில் அடிக்கடி மாற்றங்களை செய்ய கூடாது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இந்திய அணியில் அவர் மாற்றங்களை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஷ்ரேயஸ் ஐயருக்கு அவர் வாய்ப்பு வழங்கி இருக்கலாம். ஆனால வழங்கவில்லை. இப்படித்தான் இந்திய அணியில் இருக்கும் வீரர்களை அவர் அடிக்கடி மாற்றி மாற்றி வருகிறார். இதுதான் இந்திய அணியில் இப்போது பிரச்சனை என்று கைப் கூறியுள்ளார்.

சேவாக்

சேவாக்

இந்திய அணியில் கோலியின் அதிரடி மாற்றங்கள் பலன் அளிக்காது என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் கோலி அடிக்கடி தேவையின்றி மாற்றங்களை செய்கிறார். இளம் வீரர்களை தோனி ஊக்குவித்தார்.கோலி, ரோஹித் போன்ற வீரர்களை தோனிதான் உருவாக்கினார். கோலிக்கு தோனி தொடர்ந்து ஆதரவு அளித்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அப்படிப்பட்ட ஆதரவை கோலி யாருக்கும் கொடுப்பது இல்லை. வீரர்களை கேப்டன் நம்ப வேண்டும். அப்போதுதான் வீரர்கள் அதிரடியாக ஆடுவார்கள்.கோலி இங்குதான் தவறு செய்கிறார், அடிக்கடி அணியை மாற்றுவதில் அர்த்தம் இல்லை என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, December 6, 2020, 11:02 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+