Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எது நடக்க கூடாதுன்னு நினைத்தாரோ.. அது நடந்துவிட்டது.. கோலி எடுத்த முடிவு.. எவ்வளவு சிக்கல் பாருங்க!

சிட்னி: இந்திய அணி ரசிகர்கள் எது நடக்க கூடாது என்று நினைத்தார்களோ, ஏன் கேப்டன் கோலியே எது நடக்க கூடாது என்று நினைத்தாரோ அது நடக்க தொடங்கி உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. கடந்த 5 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதிலும் இந்திய அணி வெற்றிபெறவில்லை.

அதோடு தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது பிசிசிஐ நிர்வாகம் கோபத்தில் உள்ளது.

பிசிசிஐ

பிசிசிஐ

இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் பவுலிங் நாளுக்கு நாள் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்திய அணியில் பும்ரா, ஷமி, சாஹல் போன்ற தரமான பவுலர்கள் இருந்தாலும், அவர்களை கோலி சரியாக பயன்படுத்துவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.

பயன்படுத்துவது இல்லை

பயன்படுத்துவது இல்லை

இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் திறமையான வீரர்கள்தான். ஆனால் கேப்டன் சரி இல்லை என்றால் திறமையான வீரர்கள் இருந்தும் பலன் இல்லை. கேப்டன் தனது வீரர்களை சரியாக பயன்படுத்த வேண்டும். ஆனால் கோலி இங்குதான் தவறு செய்கிறார். கோலி இங்குதான் சொதப்புகிறார் என்று கூறுகிறார்கள்.

பும்ரா

பும்ரா

இந்திய அணியில் பும்ரா, ஷமி ஆகியோர் இருந்தும் அவர்களை கோலி சரியாக பயன்படுத்துவது இல்லை. ரோஹித் சர்மா அணியில் இருந்தால் பும்ராவிற்கு சின்ன டிப்ஸ் கொடுப்பார். அது மொத்தமாக ஆட்டத்தை மாற்றும். ஆனால் தற்போது இந்திய அணியில் ரோஹித் சர்மா இல்லை. இப்படிப்பட்ட நிலையில் நல்ல பவுலர்களை பயன்படுத்த முடியாமல் கோலி திணறி வருகிறார்.

எப்படி

எப்படி

பெங்களூர் அணியிலும் கோலி இதே பிரச்னையைத்தான் எதிர்கொண்டு வந்தார். பெங்களூர் அணியில் கோலி இருக்கும் போதும் அவருக்கு கீழ் வீரர்கள் சிறப்பாக செயல்பட மாட்டார்கள். ஆனால் பெங்களூர் அணியை விட்டு செல்லும் ஸ்டோனிஸ், வாட்சன், டி காக் போன்ற வீரர்கள் மற்ற அணிகளில் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள் .

அதே நிலை

அதே நிலை

தற்போது அதே நிலைதான் இந்திய அணிக்கும் வந்துள்ளது. ரோஹித் இல்லாமல் இந்திய அணியை கோலி பெங்களூர் அணி போல மாற்றி வைத்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள். அதாவது எது நடக்க கூடாது என்று கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் நினைத்தார்களோ, ஏன் கோலியே நினைத்தாரோ, அதுவே தற்போது நடக்க தொடங்கி உள்ளது.

ரோஹித்

ரோஹித்

பெங்களூர் அணியை போல திறமையான வீரர்கள் இருந்து தோல்வி அடையும் அணியாக இந்திய அணி மாறி உள்ளது. கோலி எடுக்கும் தவறான முடிவுகள்தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்., பிசிசிஐ சாட்டையை சுழற்றினால் மட்டுமே பிரச்சனை சரியாகும் என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, December 1, 2020, 11:14 [IST]
Other articles published on Dec 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+