எதுக்கு இப்படி தேவையில்லாமல் மாத்தணும்.. அவரை பாருங்க மோசமாக திணறுகிறார்..கோலிக்கு ஏற்பட்ட சிக்கல்!
சிட்னி: இந்திய அணியில் ரோஹித் சர்மா இல்லாமல் கேப்டன் கோலி கடுமையாக திணறி வருகிறார். இன்று இந்திய அணியில் இதற்காக முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.இரண்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இந்த தொடரை வென்றுவிட்டது.
மீதம் இருக்கும் ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை மொத்தமாக கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பேட்டிங்
இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் ஓப்பனிங் இணை மாற்றப்பட்டுள்ளது. இரண்டு போட்டிகளாக இந்திய அணியில் ஓப்பனிங் இறங்கி வந்த மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாத நிலையில் மயங்க் அகர்வால் அணிக்குள் வந்தார்.

மயங்க் அகர்வால்
ஆனால் மயங்க் அகர்வால் அணியில் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. இரண்டு போட்டிகளிலும் 40 ரன்களை கூட எடுக்க முடியாமல் மயங்க் அகர்வால் திணறினார். அதிக இலக்கு என்பதால் அதிரடியாக ஆடுகிறேன் என்று களமிறங்கி, தேவையில்லாமல் அவுட்டானார்.

நீக்கம்
இந்த நிலையில் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு இந்திய அணிக்குள் சுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார். சுப்மான் கில் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆட கூடியவர். முதல் தர போட்டிகளில் இவர் சிறந்த ரெக்கார்ட் வைத்து இருக்கிறார். அண்டர் 19 போட்டியிலும் இவர் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த நிலையில் தற்போது சுப்மான் கில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திணறல்
கோலி இப்படி அணிக்குள் அடிக்கடி செய்யும் மாற்றங்கள் விமர்சனங்களை சந்தித்துள்ளது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியில் ரோஹித் சர்மா இல்லாமல் கேப்டன் கோலி கடுமையாக திணறி வருகிறார். ரோஹித் சர்மா இல்லாமல் மிகப்பெரிய இலக்குகளை இந்திய அணியால் சேஸ் செய்ய முடியவில்லை. முக்கியமாக ரோஹித் இன்றி இந்திய அணியின் ஓப்பனிங் இணை அதிகம் திணறுகிறது.

தொடக்கம் இல்லை
இந்திய அணிக்கு சரியான தொடக்கம் இதனால் அமைவது இல்லை. இதன் காரணமாகவே தற்போது கோலி யாரை ஓப்பனிங் இறக்குவது என்று தெரியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார். சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் கோலி கஷ்டப்படுகிறார். ரோஹித் சர்மா திரும்பி வரும்வரை இந்திய அணியில் ஓப்பனிங் பிரச்சனை தொடரும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications