எனக்கே ஸ்கெட்ச்சா.. மொத்தமாக திருப்பிக்கொடுத்த கோலி.. ஒடுங்கிப்போன குரல்கள்.. பொளேர் பதிலடி!
சிட்னி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 கிரிக்கெட் போட்டியில் முக்கியமான சாதனை ஒன்று நிகழ்த்தி விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. முதல் இரண்டு டி 20 போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடராய் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்திய அணியில் பும்ரா, ரோஹித் இல்லாமலே இந்த சாதனையை கோலி நிகழ்த்தி உள்ளார். இன்று நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை மொத்தமாக கைப்பற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது.

தொடர்
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 கிரிக்கெட் போட்டியில் முக்கியமான சாதனை ஒன்று நிகழ்த்தி விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார். வரிசையாக டி 20 போட்டிகளில் 10 போட்டிகளில் வென்று இந்திய கேப்டன் கோலி சாதனை படைத்துள்ளார். கடந்த 2019 டிசம்பருக்கு பின் இந்தியாவை டி 20 போட்டிகளில் எந்த அணியும் வீழ்த்தவில்லை.

முடியவில்லை
தொடர்ந்து 11 போட்டிகளில் 10 போட்டியில் இந்திய அணி கோலியின் தலைமைக்கு கீழ் வென்றுள்ளது. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் முடிவு வரவில்லை. மற்ற போட்டிகள் அனைத்திலும் இந்தியாதான் வென்றுள்ளது. இதனால் இன்றும் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

கோலி
அதோடு இந்திய அணியின் கேப்டன் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி சேனா நாடுகளில் வரிசையாக தொடர்களை கைப்பற்றியுள்ளது. சேனா நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்தியா டி 20 தொடரை வென்றுள்ளது.

ஒரே கேப்டன்
சேனா நாடுகளில் வரிசையாக டி 20 தொடர்களை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். ரோஹித், தோனி என்று யாரும் இந்த சாதனையை செய்யவில்லை. இந்திய கேப்டனாக கோலி நீடிக்க கூடாது. ரோஹித் சர்மாவை கேப்டனாக போட வேண்டும், என்று பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.

ரோஹித்
ரோஹித் சர்மாவின் ஐபிஎல் ரெக்கார்டை பார்த்து அவர்தான் கேப்டனாக வர வேண்டும் என்று நிறைய குரல்கள் எழுந்தது. தற்போது அந்த குரல்கள் அனைத்திற்கும் மொத்தமாக கோலி பதிலடி கொடுத்துள்ளார். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் பொளேர் என்று கோலி பதிலடி கொடுத்துள்ளார்.கோலிக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்கள் இதனால் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் உள்ளது.


Click it and Unblock the Notifications